32 அருமையான துணை காணப்பட்டன: இன்னும் சில இடிந்துவிழத் தயாராக நின்றன. கோயிலும் விழிப்புடன் காட்சி தரவில்லை. கோயில் தேர் கறையான் பற்றி, கவனிப்பாரற்றுச் சிதைவுற்று நின்றது. தெப்பக்குளம் பாசி பிடித்த அழுக்கு நீருடன் நாறிக் கிடந்தது. மேலத் தெரு, நடுத்தெரு, கீழத் தெரு என்று பெயர் பெற்றிருந்தவை ஒழுங்கான தெருக்களாகவே தெப்பக்குளத்தில் குளிப்பது பற்றியும், கோயில் பெருமை பற்றியும் ஆச்சி எவ்வளவோ சொன்னளே! என்று கைலாசம் எண்ணினுன், இந்த ஊரைப் பற்றியும்தான்: என்றது அவன் மனம் இதைவிட காணப்பாடி எவ்வளவோ பெரியது. வசதிகள் உடையது. . . -அவன் உள்ளம் எடை போட்டுக்கொண்டிருந்தது. பாண்டியன் பிள்ளை வீட்டில்தான் இருந்தார். அவருக்கு ஐம்பது வயசுக்கு அதிகமாகவே இருக்கும் என்று தோன்றி யது. கைலாசத்தைக் கண்டதும், யார்-என்ன என்று விசாசித்தார். அவன் விஷயத்தைச் சொன்னன். 'அக்கா இங்கியா வந்திருக்கா? ஏன் வீட்டுக்கு வரலே?" என்று பதட்டம் காட்டிஞர் அவர். அவளால் நடக்க முடியலே, கோயிலில் இருக்கிரு. நீங்க பாலும், கோயில் திறவுகோலும் எடுத்துக்கிட்டு. ' அவர் வறண்ட சிரிப்பு சிரித்தார். இந்த ஊரிலே இந்த நேரத்திலே பாலுக்கு எங்கே போறது? நல்ல காலத்திலேயே பாலு ஒழுங்காக் கிடைக்காது. பக்கத்து ஊருக்குப் போயி வாங்கியாசனும், சாயங்காலம் ஆறு மணிக்குமேல் தான் பாலைப் பார்க்க முடியும் என்ருர். இருக்கட்டும், கடுங் காப்பி போட்டு எடுத்துக்கிட்டுப் போகலாம்...கொஞ்ச நேரம் திண்ணையிலே இரியும், தம்பி’ என்று கைலாசத்திடம் சொன்ஞர். தலேயைச் சொறிந்தார். அக்கா ஏன் இப்ப திடீர்னு புறப்பட்டு வந்தா? தள்ளாத வயசிலே? ஊம்ங். . . அவ எப்பவும் பழைய காலத்தையே மனசிலே வச்சுக்கிட்டு இருக்கிரு. ஊரும் காலமும் ரொம்ப
பக்கம்:அருமையான துணை.pdf/91
Appearance