பக்கம்:அருமையான துணை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9榜, அருமையான துனே விட்டது, ஏதோ வியாதிவந்து பலவீனப்படுத்தியது என்றும் கேள்வி, அதனால் புகழ் கொஞ்சம் டிம் அடிக்கத் தொடங் கியது. நாடக வசூலும் பாதிக்கப்பட்டது. காத்தலிங்கம் தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. அவர் மூளையில் ஒரு மின்வெட்டு ஏற்பட்டது. அதைச் செயல்படுத்தியதன் மூலம் கம்பெனியைக் காத்த அருளாளர் ஆகவும் மாறி நின்ருர் அவர். அப்படி அவர் என்னதான் செய்தார்? முதன் முதலாக நாடகமேடையில் பொம்பிளை கள்ளபார்ட் டை அறிமுகம் செய்துவைத்தார். கவ ர் ச் சி அம்சங்கள் நிறைந்திருந்த இளம் பெண் ஒருத்தியை அட்டகாசக் கள்ளி ஆகப் பயிற்று வித்து, “ஏ ஒன் கள்ளபார்ட்காரி என்று மேடைக்குக் கொண்டுவந்த பெருமை கள்ளபார்ட் காத்தலிங்கத்துக்கே உரியது. அவரால் டிரெயினிங் கொடுக்கப்பட்டு, அறிமுக கானவள்தான் கள்ளபார்ட் காமாட்சி. அவள் காத்தலிங்கத்தின் உறவுப் ெய எண் என்று சோன்னர்கள். சொந்த அத்தை மகள்தான் என்று சிலர் அறிவித்தார்கள். அதெல்லாம் இல்லை. ரயிலில் பாட்டுப் பாடி காசுப் பிச்சை கேட்டுத் திரிந்த எவளோ ஒருத்தி. அவளேப் பிடித்து, பட்டைதீட்டிய வைரம் ஆக்கிவிட்டார் காத்தலிங்கம் என்று சிலபேர் சொன்னர்கள். கழைக் கூத்தாடிகள் கோஷ்டி ஒன்றிலே அவர் இந்தப் பெண்ணே பார்த்தார், அவருக்குப் பிடிச்சிருந்தது. கூத்தாடிகளுக்குக் கொஞ்சம் ரூபாய் கொடுத்து, அவர் அவளை சேர்த்துக்கொண் 1.ார். நல்லாப் பழக்கி நாடகக்காரி ஆக்கிவிட்டார்" என்றும் பேச்சு அடிபட்டது. உண்மை எதுவாக இருந்தாலும் சரியே. கள்ளபார்ட் காத்தலிங்கத்தின் செலக்ஷனும் டிரெயினிங்கும் சோ.ை போகவில்லை. காமாட்சி ஜிஞ்சாமிர்த கள்ளபார்ட்காரி' ஆகத் திகழ்த்தாள். இரண்டு பேரும் ஒன்ருகவே மேடைமீது தோன்றினர்கள். காத்தலிங்கம் கோட்டைக் கொத்தளம் மீதிலேறி"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/99&oldid=738787" இலிருந்து மீள்விக்கப்பட்டது