பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53/உள்ளத்தில் மணக்கும் முல்லைச்சரம்



கொடுக்கவேண்டும். இந்தக் காரியத்தை ஒழுங்காகச்செய்தால், தமிழ்ச் சமுதாயத்தைப் பெருமுன்னேற்றத்தை நோக்கி இழுத்துச் செல்ல முடியுமென நம்புகிறேன். இந்த நன்முயற்சிக்கு நம் அப்பாதுரை (பன்மொழிப்புலவர்) தேவநேயப் பாவாணர் போன்றவர்கள் பயன்படுவார்கள்."

சற்று நிறுத்துகிறார்; சிந்திக்கிறார்.

"இந்த முயற்சியின் முக்கியமான உள்நோக்கம் உனக்குப் புரிகிறதா?" என்று கவிஞர் என்னைக் கேட்டார்.

“புரிகிறதையா!" என்று உணர்ச்சி வயப்பட்டுத் தலையாட்டுகிறேன்.

"தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடு சென்றுள்ள சில போலிகள் மகாபாரதமும், கம்பராமாயணமும், கந்தபுராணமும் தமிழர்களின் தலை சிறந்த இலக்கியங்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறார்களாம்; மொழிபெயர்த்தது நூல்வடிவில் வெளியிடுகிறார்களாம், இவைகளைப்படித்த பிறநாட்டார் அவைகளின் கட்டுக் கதைகளையும், மூடத்தனங்களையும் எண்ணி நம்மையெல்லாம் காட்டுமிராண்டிகள் என்று எள்ளி நகையாடுகிறார்களாம். தமிழரின் மானம், மரியாதையாவும் அங்கே கப்பலேறுகின்றன. இந்த நிலையை நீடிக்கவிடலாமா?... இதற்காகத்தான்..."

கவிஞர் நீண்ட பெருமூச்சு விடுகிறார். பிறகு, “சரி எனக்கு ஒரு சோடா உடைத்துக் கொடுத்துவிட்டு நீபோய்ப் படுத்துக்கொள்" என்கிறார், (தண்ணீருக்குப் பதிலாகச் சோடா குடிப்பதுதான் அப்போது கவிஞரின் பழக்கமாக இருந்தது.)

“கவிஞர் ஏன் படம் எடுக்க வந்தார்? இந்தத் தள்ளாத