உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 குழந்தையை -எங்க அம்மணியோட வயிற்றிலே வந்த வைரத்தை ஒரு குறைவும் இல்லாம காப்பாத்துங்க, அம்மா!' என்று கோகுல் கூறவேண்டியதை வேலைக்காரனே கூறி முடித்தான். கோமதி யிடம் விடை பெற்றுக்கொண்டு, கோகுல் பத்திரிகை. அலுவலகத்திற்குப் புறப்பட்டான். அன்றைய தினம் ஆசிரியர் கோகுல் எழுதிய கட்டுரைகள் அத்தனையும் சுவை மிகுந்தவை! தலையங்கம் புது முறுக்கோடு காணப்பட்டது ! நண்பர்கள் காரணம் விசாரிக்க ஆரம்பித்தனர். காரணத்தைக் கேட்டு அனைவருமே மகிழ்ந்தனர். ஆசிரியர் அறைக்கு ஏறிச் செல்ல வேண்டிய ஐம்பது மாடிப்படிகளையும் அன்றைய தினம் அவன் அனாயாசமாகக் கடந்தான். வாழ்க்கை யின் முதல் படியிலே வழுக்கி விழுந்து, விழுந்த இடத்திலே குமார் என்னும் கோமேதகக் கல்லை எடுத்த பிறகு, இத்தனை நாள் கழித்து இப்போதுதானே அடுத்த படியில் கால் வைக்கத் துணிந்திருக் கிறான். முதல் தாரத்துக் குழந்தை இருக்கும்போது இரண்டாந். தாரமாக ஒருத்தியைக் கல்யாணம் செய்து கொள்வது, சரியா தவறா என்ற கேள்விகளைத் தன் நண்பர்களிடமெல்லாம் கேட் டான். அவரவர்களின் அனுபவங்களை யெல்லாம் பொறுக்கிச் சேர்த்தான். அதில் அவனுக்குச் சாதகமான பதிலும் கிடைத் தது; பாதகமான பதிலும் கிடைத்தது. பள்ளிக்கூடத்திலே குழந்தை குமார் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு எதையோ சிந்தித்துக்கொண்டிருந்தான். எதைச் சிந்திக்கப் போகிறான்; தன் தகப்பனைப் போல அகில உலக யுத்தத்தைப் பற்றி என்ன தலையங்கம் எழுதலாமென்றா ? அல்லது தனது பள்ளி ஆசிரியரைப் போலச் சம்பள உயர்வுக் கிளர்ச்சி வெற்றி பெறுமா என்றா ? அவன் சிந்தனை முழுதும் தாயாரைப் பற்றியதுதான்! விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள் அவனைப் பார்த்துக் கேலி புரிந்தார்கள். "பாருடா, கௌதம புத்தர் சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறார்!” என்று அன்றைக்குப் படித்து பாடத்தை ஒப்புவித்தான் ஒரு. குறும்புக்கார இளைஞன். கௌதம புத்தர் என்றாலே என்ன என்று தெரியாத பிஞ்சு, ருமார் ! அவன் படிக்கும் வகுப்பே வேறு ! பள்ளி முடிந்து, பசலைகள் அனைவரும் கூட்டங் கூட்டமாகக் கும்மாளம் அடித்தபடி வீடு நோக்கி ஓடுகிறார்கள். குமார் மட்டும் தன்னந்தனியாக வந்துகொண்டிருக்கிறான். வீட்டுக்குத் திரும்பும் குழந்தைகளை அவர்களது தாய்மார்கள் வாயிலில் நின்று எதிர் கொண்டழைத்துத் தூக்கி முத்தமிடுகிறார்கள். குமார் அவர்களைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/18&oldid=1699640" இலிருந்து மீள்விக்கப்பட்டது