உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரும்பு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

13 ஒரு தளர்ச்சி ! தாங்குமா அந்த கவனிக்கிறான். அந்த அரும்பின் நடையிலே கண்களிலே கலக்கம் ! இருதயத்திலே புயல் ! இளந்தங்கம் அந்தக் கொடு நெருப்பை ? உருகி ஓடிற்று ! 'தனக்கு ஒரு அம்மா இருந்தால் தன்னையும் இப்படித் தூக்கி முத்தமிட்டு எதிர்கொண்டு அழைப்பார்களே !' இப்படித்தான் விம்மியது போலும், அந்தப் பிறை நிலவு ! எல்லாப் பிள்ளைகளும் அவரவர்கள் வீடுகளுக்குப் போய்விட் டார்கள். குமார் மட்டும் வீடு நோக்கி வந்துகொண்டிருக்கிறான். அதோ, அவன் வீடு ! வீட்டு வாயிலிலே யார் அந்தப் புது உருவம்? ஒரு வேளை...அம்மாவா ? வாயிற்படியிலே அடியெடுத்து வைத்த அவனை வாரி அணைத்துத் தூக்கினாள் கோமதி ! எதிர்பாராத ஓர் உணர்ச்சி குமாரின் உள்ளத்தை உலுக்கிவிட்டது போலும் ! அவன் கண்கள் தாரை தாரையாக நீரைப் பொழிந்தன. கோமதிக்கு நடுக்கம் பிறந்தது. தன்னைக் குமார் ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கருதினாள். அவள் உள்ளம் போர்க்களமாயிற்று ! அரும்பு பொதியவிழாச் செடி இந்தக் குடும்பம் ! அதன் வேரிலே ஊற்றப் படும்வெந்நீராகத்தான் தானே ஆகிவிட்டோமோ எனப்பயந்தாள்! சிறிது நேரத்திற்கெல்லாம் குமாரின் உடல் கொதிக்க ஆரம்பித்தது. கோமதி அழுதே விட்டாள். அலுவலகத்திலிருந்து குழந்தைக்குத் தின்பண்டங்கள் வாங்கி வந்த கோகுல், இந்தக் காட்சியைப் பார்த்துக் கலங்கினான். "அம்மா பாருடா, கண்ணா !" என்று கோமதியைக் காட்டினான். “எனக்குப் பொய் அம்மா வேணாம் ! நிஜ அம்மாதான் வேணும்!" என்று புலம்பினான் குமார். அந்த வார்த்தைகள் வெடி மருந்துச் சாலையில் கிளம்பும் தீப்பொறிகள் போல இருந் தன, கோமதிக்கு ! குமாரின் காய்ச்சல் அதிகமாயிற்று. கோமதிக் குக் குழந்தையுடன் இணைபிரியாதிருக்க ஒரு சந்தர்ப்பம் ஏற்பட் டது. அந்தச் சந்தர்ப்பம், குழந்தைக்கும் அவளுக்கும் தணியாத பாசத்தைத் தோற்றுவிக்க உதவிற்று. ஆபத்து நேரங்களில்தான் நட்பு, காதல், பாசம் இவைகளின் ‘மீட்டரே' அதிகமாகிறது. ஏன்; சில இடங்களில் ஆரம்பமாகிறது என்றுகூடச் சொல்ல லாம் ! அதற்கு உதாரணந்தானே, கோகுல், கோமதி இருவரின் காதல் ! குமார், சிறிது சிறிதாக உடல் நலம் பெற்றான். அவன் உடல்நலம் பெற்று எழும்போது கோமதியை “அம்மா!” என்று வாயார அழைக்கும் புதிய குமாராக இருந்தான். கோமதிக்குக் கொண்டாட்டம் தாங்கவில்லை. கோகுல்கூடச் சலித்துக்கொள்கிற அளவுக்கு அவள் குழந்தையைப் பராமரிக்க ஆரம்பித்துவிட்டாள். குமாருக்கு ஒரு அம்மா கிடைத்துவிட்டாள். பள்ளிக்கூடம் அனுப்ப, பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது எதிர்கொண்டழைக்க ஓர் அருமையான அம்மா கிடைத்துவிட்டாள்! இப்போது, குமார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/19&oldid=1699641" இலிருந்து மீள்விக்கப்பட்டது