சொல்லாய்க் கழிகின்றது ஒரு கனவான்: அவர் பலகாலம் தமக்குச் சொந்த மாக ஒரு வீடு கட்டிக்கொள்ளவேண்டும் என்று நினைத் தார் கட்டத் தொடங்கினார். அந்த வீட்டில் எல்லா வித மான வசதிகளையும் அமைக்க முயன்றார். அதன் முகப்பு மிகவும் அழகாக இருக்கவேண்டும் என்று எண்ணினார். முகப்பைப் பார்த்து மாத்திரத்தில் யாவரும் வியந்து பாராட்டவேண்டும் என்பது அவருடைய அவா அப் படியே நல்ல வாசலாகச் செய்து அற்புதமான சிங்காரங் களை அமைத்துத் தோரணங்களைக் கட்டினார். வீடுகட்டி நிறைவேறியது. நல்ல நாளில் வீட்டுக்குள்ளே புகுந்தார்; அதிலே வாழத் தொடங்கினார். அவர் நல்ல ஆடை ஆபரணங்களைப் புனைந் தார் . நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து நித்தம் ஓர் உடை உடுத்து எல்லா மக்களுக்கும் தம்முடைய வள வாழ்வின் பெருமையைக் காட்டிக்கொண் டிருந்தார். அவருடைய உடம்பு வரவரப் பருத்தது. சில காலம் கழித்து அவருடைய இளமை மாறியது. கரு மயிர் நரைத்தது. உடம்பும் மெலிவடைந்தது. யார் யாரோ மருத்துவர்கள் வந்து பார்த்தார்கள்; மருத்துவத் தினாலே தீராத நோய் என்று சொன்னார்கள். கடைசியில் அவர் இறந்து போனார். அந்த வீட்டில் அவர் நிரந்தரமாக இருக்கவில்லை. நல்ல மாளிகையை அமைத்து அலங்காரமான வாசலைக் கட்டி உள்ளே போய் வந்து நடந்தார். அழகான உடைகளை உடுத்தார். பின்பு இளமை மாறி நரைத்தார். இப்பொழுது
பக்கம்:அருளாளன் 1954.pdf/30
Appearance