பக்கம்:அருளாளர்கள்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'எறியும் தண் காற்றைத் தழுலி என்னுடைக்

கோவிந்தன்’ என்னும்’

“நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே வா என்று

கூவும் நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான்’

என்றாலும்’ ‘போம் இள நாகத்தின் பின்போய் அவன் கிடக்கை’

ஈதென்னும்’ ‘கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தனாம் என

ஓடும்’

“வாய்த்த குழல் ஓசை கேட்கில் மாயவன்

என்றுமையாக்கும் ‘உருஉடை வண்ணங்கள் யகாணில் உலகளந்தான்

என்று துள்ளும்’ ‘நாறு துழாய் மலர் கநாணில் நாரணன் கண்ணி’

ஈதென்னும்’ ‘ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் ‘அவன் உடை

வெண்ணெய் ஈதென்னும்’ (நாலா: 2447-2454) இவ்வெடுத்துக்காட்டுகள் ஓர் உண்மையை நமக்கு அறிவுறுத்துகின்றன. மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளிலும் அனுபவிக்கப்படும் பொருள்கள் இங்குக் காட்டப்பெற்றுள்ளன. இவை அனைத்தையும் இறைவன் வடிவமாகவும் அவனுடைய பொருள்களாகவும் காண்கிறார் ஆழ்வார். கண்ணாகிய பொறியை வெறுத்து மூடிக்கொண்டிருப்பின், கரும் பெரும் மேகங்களைக் கண்டும், உருவுடை வண்ணங்களைக் கண்டும் கண்ணன்