பக்கம்:அருளாளர்கள்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 * அருளாளர்கள்



என்று ஏறப் பறக்கும் 'நிலை ஏற்பட்டிராது. செவிகளாகிய பொறியை வெறுத்து அடைத்துக் கொண்டிருப்பின் 'வாய்த்த குழல் ஓசையைக் கேட்டு மாயவன் என்று மையாத்திருத்தல்' இயலாது. எனவே பொறிபுலன்களை ஆழ்வார் வெறுத்து அடக்கி அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்-அல்லர்.

  மேலும் எல்லாப் பொருளும் அவனே என்று கண்ட பின்னர் எதனை வெறுப்பது? எதனை ஒதுக்குவது?
‘திட விசும்பு, எளி, வளி, நீர், நிலம் 
                   இவைமிசைப் படர் பொருள் முழுவதுமாய் அவை 
                   அவைதொறும் உடல்மிசை உயிர் எனக் கரந்து, 
           எங்கும் பரந்துளன் சுடர்மிகு சுருதியுள் இவை உண்ட 
                      சுரனே '
                    (நாலா: 2088)

முக்கூட்டுப் பரிமாணமுடைய இவ்வண்டங்களும் (Three dimension) அவற்றிற் காணப்பெறும் பொருள்களும் இறைவனுடைய வடிவம் என்றார் பெரியார். இனி விஞ்ஞானி ஜன்ஸ்டீன் கூற்றுப்படி நான்காவதாக உள்ள ஒரு பரிமாணமும் உண்டு. அதுவே காலம் என்ற பரிமாணமாகும். (Fourt dimension) காலமாகிய அந்த நான்காவது பரிமாணமும் இறைவனே என்ற கருத்தையும் நம் பெரியோர் கூறிப்போயினர். காலம் என்பது ஒன்றேயாயினும் நம் வசதிக்கேற்ப அதனை மூன்றாகவும், நம்மிற் சிலர் இரண்டாகவும் பிரித்துக் கூறுவர். (பெளத்தர்கள் காலம் என்பது இரண்டே என்றும் அவை எதிர்காலம், இறந்தகாலம் என்பவையே என்று கூறுவர் இதனையும் உள்ளத்திற் கொண்ட ஆழ்வார்,

  “போகின்ற காலங்கள், போய 
                       காலங்கள்,
        போகு காலங்கள், தாய், 
                  தந்தை,உயிர், ஆகின்றாய்! . . . . . (நாலா 2256)