பக்கம்:அருளாளர்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மாழ்வார் . 93

‘. . . . சென்று செல்லாதன முன்னிலாம்
காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?
'

(நாலா: 2388)

காலத் தத்துவமும் அவனே என்று பேசுகிறார். மணிவாசகரும் இதே கருத்தை,

'.....
ஞாலமே! விசும்பே! இவை வந்துபோன்
காலமே! உனை என்று கொல் காண்பதே!

(திருமுறை: 8, 5, 43)

என்று பாடிச் செல்வதைக் காண்கிறோம். இவற்றை நன்கு அறிந்தவர்கள் இறைவன் வடிவமாக அமைந்து உள்ள இப்பொருள்களையும் இவற்றை அனுபவிப்பதற்குக் கருவியாக அமைந்த பொறி புலன்களையும் வெறுக்கவோ அழிக்கவோ விரும்புவதில்லை.

அப்படியானால் பொறிபுலன்களால் அலைப்புறுவதாகப் பாடிய பாடல்களின் உட்கருத்தென்ன? ஆழ்ந்து சிந்தித்தால் உண்மை விளங்காமற் போகாது. நெருப்பு இருக்கிறது. அதன் இயல்பை அறிந்து கவனத்துடன் பயன்படுத்தினால் இனிய உணவைச் சமைப்பதற்கும், குளிரைப் போக்கிக் கொள்வதற்கும் அதே நெருப்புப் பயன்படும். ஆனால் அதனைப் பயன்படுத்தும் வகையறியாது விட்டுவிட்டால் எந்த உடம்பின் குளிரைப் போக்கப் பயன்படுமோ அதே உடம்பை எரித்தும் ஊறு செய்யும். பொறிபுலன்கள் நெருப்பைப் போன்றவை. நாம் தலைவராக நின்று அவற்றை அடக்கிப் பயன்படுத்தினால் ஒப்பற்ற நன்மைகளை அடையலாம். அவை கட்டு மீறிச் செல்கையில் அவற்றை அடக்க வேண்டும். நல்வழியில் திருப்பி விட வேண்டும். நம்மால் அவற்றை அடக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/104&oldid=1291847" இலிருந்து மீள்விக்கப்பட்டது