பக்கம்:அருளாளர்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவிளையாடலும், பரஞ்சோதியாரும் *133

பாண்டியனிடத்தில் சொல்கிறான், உங்களுடைய இசைப் புலவனை நான் வாதில் வெல்ல வேண்டும், வரச் சொல்லுங்கள் என்று. பாணபத்திரன் சொக்கனிடத்தில் சென்று முறையிட்டான். வந்தவனுடைய படாடோபத் திற்கு எதிரில் நான் என்ன செய்ய முடியுமென்று முறையிடுகிறான். சொக்கன் தன்னுடைய பக்தனாகிய பாணபத்திரனுக்குப் பதிலாக, அன்று இரவு ஹேமநாதன் தங்கியிருந்த வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்தான். பக்கத்தில் ஒரு விறகுக் கட்டு. விறகு விற்கிற ஒரு வேலை யாளாக வந்திருக்கிறான். மெள்ள யாழ் ஒன்றை எடுத்தான். அந்த யாழுக்கு இலக்கணம் சொல்வார், அவ்வளவு பழைய யாழாம். அதை எடுத்து, 'சாதாரிப்பண்’ பாடினான் என்று சொல்லுவார். தேவ காந்தாரி என்று சொல்லுவோமே, அதன் பழைய பெயர் 'சாதாரி'. அதைப் பாடினானாம். உள்ளேயிருந்த ஹேமநாதன் கேட்டான். இந்த யாழ் ஒலியும், கண்டத் தொனியும் வேறுபாடு காண முடியாத அளவுக்குப் பாடினான் என்று சொல்லுகிறார். இன்று நாம் பலமுறை கேட்கின்றோம். சுருதியோடு தொடர்பே இல்லாமல் இசைக் கச்சேரி நடப்பதைப் பார்க்கிறோம். அந்த நேரத்திலே விறகு வெட்டியின் பாடல் நினைவுக்கு வருகிறது. இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் பாடினான். உடனே ஹேமநாதன் வெளியில் வந்தான். ஐயா, புலவரே என்றான். இவன் எழுந்து வணக்கம் தெரிவித்து, 'நான் இசைப் புலவன் இல்லீங்க, விறகு வெட்டி விற்கிறவன்’ என்று சொன்னான். விறகு வெட்டி விற்கிறவனா! அப்படியா! நீ இப்படிப் பாடுகிறாயே, யாரப்பா? என்று கேட்டார்.'பாண பத்திரர் என்று இந்த ஊரில் இசைப் புலவர் ஒருவர் இருக்கிறார்; அவருக்குப் பல சீடர்கள் இருக்கிறார்கள்; நானும் அவரிடத்தில் கொஞ்சகாலம் படித்தேன்; உனக்கு வயதும் ஜாஸ்தியாகிப் போச்சு, உனக்கு விறகு புத்திதான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/144&oldid=1291906" இலிருந்து மீள்விக்கப்பட்டது