பக்கம்:அருளாளர்கள்.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சைவ சமயத்தில் ஒளி வழிபாடு 151

இறைவனை ஒளிவடிவாகக் கண்டு வழிபடும் மரபு இந்நாட்டில் தொன்று தொட்டு வந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. சூரியகாயத்ரி சூரியனையே முழு முதலாகக் கொண்டு வழிபட இத்தமிழர் சிவபெருமானின் அட்டமூர்த்தங்களுள் சூரியனை உள்ளடக்கி ஒளிவடிவான இறைவன் பேரொளியாக நிற்பதோடல்லாமல் இவ்வனைத் திற்கும் விளக்கத்தைத் தரும் சக்தியையும் பெற்று உள்ளான் என்பதை அறியலாம்

அறுபத்தி மூன்று நாயன்மார்களில் அனைவருக்கும் முற்பட்டவர்கள் இறைவனால் ‘அம்மையே என்றழைக்கப் பட்ட காரைக்கால் அம்மையாரும், அதே இறைவனால் நில்லு கண்ணப்ப’ என்று பேசப் பெற்ற கண்ணப்பரும் ஆவர். கண்ணப்பரின் வரலாறு பதினெண் புராணங்களில் ஒன்றாகிய சிவபுராணம் என்றழைக்கப்படும் வாயு புராணத்திலும் இடம் பெற்றுள்ளது. எனவே இவர்கள் இருவரும் 1ஆம் அல்லது 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் களாய் இருக்கலாம். காரைக்கால் அம்மையார் தாம் பாடிய அற்புதத் திருவந்தாதியில் இறைவனை சோதியாக நினைந்து பாடுவதைப் பின்வரும் பாடல்கள் மூலம் அறியலாம்.


- - ---- --"Α” -γ α φ”. சுடருருவில் என்பறாக்கோலத் தெரியாடும் எம்மனார்க்கு

(அற்புதத் திருவந்தாதி - 45)


காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே

(அற்புதத் திருவந்தாதி - 60) அவனே இருசுடர்தி ஆகாசம் ஆவான்

(அற்புதத் திருவந்தாதி - 64)