பக்கம்:அருளாளர்கள்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


150 அருளாளர்கள்

விண்டில்லை யுள்ளே விளக்கொளி யாமே”

(திருமுறை : 10,2693)

இப்பாடலில் ஒளி என்ற பெயரில் துவாத சாந்தப் பெருவெளியில் காட்சி தரும் பேரொளியையும், ஆக்ஞையில் தோன்றும் சுடரொளியையும் (சோதி தரிசனம் தோன்றும் இடம் குறிப்பதோடு இறைவியே ஒளிவடிவாக உள்ளாள் என்பதையும் யோகியாகிய திருமூலர் கண்டு உரைப்பதை மனத்தில் பதிக்க வேண்டும். இவ்வாறு இறைவன் ஒளி வடிவானவன் என்பதைப் பல பாடல்களில் எடுத்துக் காட்டிய திருமந்திரம் விளக்கையும் அவன் வடிவென்றே கூறுவதைப் பின்வரும் பாடலால் அறியலாம்.

விளக்கினை யேற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே

(திருமுறை : 10, 1818) இப்பாடல்களில் ஒளிக்கு ஆகுபெயராக கதிரவனும், விளக்கும் அமைந்திருப்பதைக் காணலாம்.

பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் எழுந்த திருவிசைப்பாவின் முதற்பாடலே விளக்கைக் குறிப்பிடு வதைக் காணலாம்.

“ஒளிவார் விளக்கே உலப்பிலா ஒன்றே!

உணர்வுதும் கடந்ததோர் உணர்வே! என்று பாடுவதால் , இறைவனையே விளக்காக உருவகித்தமை அறிதற்குரியது.

இதுவரை கூறியவற்றிலிருந்து சங்க காலத்தில் இருந்து பத்தாம் திருமுறை முடிய உள்ள எல்லா நூல்களிலும்