பக்கம்:அருளாளர்கள்.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தாயுமானவர் கூறும் வாழ்க்கை நெறி 171

கூட இந்தச் சாதாரண சித்திகளைச் (யட்சினிவித்தைகள்) செய்ய முடியும் என்று தெரிகின்றது. ஆகவே இது போன்ற காரியங்களைச் செய்கின்றவர்களைப் பார்த்து நாம் என்ன நினைக்கிறோம். இவர்கள் தெய்வ அருளை முழுவதும் பெற்றவர்கள் என்று நினைக்கின்றோம். அது தவறு என்பதை எடுத்துக் காட்ட வந்த தாயுமானவப் பெருந்தகை, சினம் இறக்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே மனம் அடங்கக் இறங்க கல்லாதவர்கள் ஏன் வாய் திறந்து பேசுகிறார்கள் என்று எள்ளி நகையாடுவதோடு, சாடவும் செய்கின்றார்.

இனி இரண்டு சமயங்களுக்கிடையே ஓர் ஒருமைப்பாட்டைக் கண்டார். இரண்டு சமயங்கள் மட்டுமா அவர்கள் காலத்தில் இருந்தன? எத்தனையோ சமயங்கள் இருந்தன. அப்படியானால் சிவபெருமானாகிய நடராசப் பெருமானை வழிபடுகின்ற தாயுமானவப் பெருந்தகை ஏதோ சைவம் என்ற குறுகிய வட்டத்திற்குள் நின்று இவை தவிர ஏனையவெல்லாம் சமயங்களே அல்ல என்று கருதினாரா? இல்லை, பரந்த நோக்கம் உடையவராக இருந்தாரா? வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை என்று சொல்லுகின்றாரே இந்த வேதாந்தம் சித்தாந்தம் இரண்டுக்கிடையேதான் சமரசம் கண்டாரா? என்றால் இல்லை என்பதை அவரே தெரிவிக்கின்றார். ஆண்டவனை நோக்கிச் சொல்லுகின்றார். . .

ஐவகை எனும்பூத மாதியை வகுத்ததனுள்

அசரசர பேத மான -

யாவையும் வகுத்துநல் லறிவையும் வகுத்துமறை

யாதிநூ லையும் வகுத்துச்

சைவமுத லாம்.அளவில் சமயமும் வகுத்துமேற்

சமயங் கடந்த மோன -