பக்கம்:அருளாளர்கள்.pdf/196

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட வாழ்வு நெறி 185

இந்த அடிப்படையில் ஏன் இப்படிச் சிந்திக்கிறோம் என்றால் வாழ்க்கை நெறியை அவரவர்கள் வகுத்திருக் கிறார்கள். ஏசுபெருமான் தாம் தோன்றிய சூழ்நிலைக் கேற்ப வாழ்க்கை நெறியை வகுத்திருக்கிறார். அதேபோல பின்னே வந்த பெருமக்கள் அனைவரும் எந்தெந்தக் காலத்தில், எந்தெந்த சூழ்நிலையில் தோன்றினார்களோ அதற்கேற்ப வாழ்க்கை நெறியை அமைத்திருக்கிறார்கள். மிகப் பெரியதாகிய புத்த சமயத்தைத் தோற்றுவித்தவ ராகிய பகவான் புத்தரைப் பற்றி ஒன்று சொல்லுவார்கள். அவருடைய சீடராகிய ஆனந்தனை பிம்பிசாரர் மறு பிறப்பு உண்டு என்று நம்புகிறாயா என்று கேட்கிறார். ஆனந்தன் அதற்களித்த பதில், குருதேவர் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்பதாகும். இனி மறுபிறப்பு உண்டு என்பதை நம்புகிறாயா என்ற கேள்வியை அடுத்து கடவுளைப் பற்றிய கேள்வியும் வருகிறது. குருதேவர் அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்று ஆனந்தன் சொல்கிறான். மிகச் சிறந்ததாகிய பெளத்த சமயத்தை ஏற்படுத்திய பகவான் புத்தர் இந்த இரண்டு பெரிய வினாக்களுக்கும் ஏன் பதில் கூறவில்லை என்று இங்கு அமைதியாகச் சிந்தித்தால் ஓர் உண்மை விளங்கும். இந்த இரண்டும் அன்றைய நிலையில் தேவையில்லாமல் இருந்த ஒன்று. கடவுட் பொருளைப் பற்றிய ஆராய்ச்சி அன்று தேவைப்படவில்லை. ஆனால் மக்கள் அடைகின்ற துக்கம், துக்க உற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரணமார்க்கம் என்ற அளவில் மட்டும் தம்முடைய சமயத்தை நிறுத்திக் கொண்டார். ஆகவே ஒவ்வொரு சமயத்தை ஏற்படுத்திய வர்களும் அன்றைய சூழ்நிலையில் சமுதாயத்திற்கு எது தேவையோ அதையே பெரிதுபடுத்தினார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

இந்த அடிப்படையை வைத்துக்கொண்டு பார்ப்போ மேயானால், இந்தத் தமிழ் நாட்டைப் பொறுத்த மட்டில்

13