பக்கம்:அருளாளர்கள்.pdf/203

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


192 அருளாளர்கள்

முடியும். முக்காலமும் உணர்ந்த பகவான் எந்த ஒன்றுக்காக விவேகானந்தர் பிறப்பிக்கப் பட்டாரோ அந்த ஒன்று நிறைவேற வேண்டுமாகில் அது பழைய அடிப் படையில், சம்பிரதாய முறையில் பக்தி அடிப்படையில் நடைபெறாத காரியம் என்பதை உணர்ந்தார். அறிவு வளர்கின்ற மேலைநாட்டில் சென்று இந்த நாட்டினுடைய மிக அடிப்படையான இறைத் தத்துவத்தைப் போதிக்க வேண்டுமேயானால் அது பஜனை பாடுவதன் மூலமோ, பக்தி செலுத்துவதன் மூலமோ நடைபெறாத காரியம். அறிவை நம்பி வாழ்கின்ற சமுதாயத்திற்கு அறிவு மூலமே சென்று தத்துவத்தைப் போதித்தால் அது எடுபடும். ஆகவே விவேகானந்தரைப் பொறுத்த மட்டில் தாம் சென்ற வழியிலே செல்ல விடாமல் தடுத்து வேறு வழியில் அவருடைய அறிவை வளர்த்து, வேத அடிப்படையில் அவர் செல்லுமாறு செய்கிறார் பகவான் இராமகிருஷ்ணர் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

இதை விளங்கிக் கொள்வோமேயானால் வள்ளலா ருடைய வாழ்க்கையில் வந்த வேறுபாட்டையும் விளங்கிக் கொள்ள முடியும். ஒன்று, இரண்டு, மூன்று திருமுறை களில் விக்கிரக வழிபாட்டை அவ்வளவு விரிவாகப் பேசுகின்றார். இன்னும் சொல்லப்போனால் திருநீறு இடாதவர்களைக் கனவில் கூடக் காணக்கூடாது என்றெல் லாம் பேசுகிறார். திருநீற்றுக்கும், உருத்திராட்சத்திற்கும் எல்லையற்ற மதிப்புத் தந்த வள்ளற்பெருமான் 6ஆம் திருமுறைக்குப் போகும்போது புளியம்பழத்திலிருந்து ஒடு விடுபடுவது போல இவற்றிலிருந்து அவர் விடுபடுவதைக் காண்கிறோம். அது ஏன் என்பதை ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது அவருடைய ஆன்மிக வளர்ச்சியைக் காட்டுகிறது. சம்பிரதாய அடிப்படையில் முருகனிடத்தில் ஈடுபட்டு, சிவபெருமானிடத்தில் ஈடுபட்டு, அந்த பக்தியை வளர்த்து, கருவி, கரணங்கள் எல்லாம்