பக்கம்:அருளாளர்கள்.pdf/206

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளலார் கண்ட வாழ்வு நெறி: 195

பசியைப் போக்குவதையே பெரிய கடமையாக அவர்கள் கருதாதக் காரணம் அன்று அந்த அளவுப் பசி தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான்.

தமிழ்நாடு தமிழர்கள் கையில் இருந்தது. இங்கு ஓரளவு வசதியான வாழ்க்கை வாழ்ந்திருந்தார்கள். ஏதோ ஓரிரண்டு இடங்களில் பஞ்சம் என்பது இயற்கையின் சீற்றத்தினாலே வருமேயானால் அந்த இடங்களில் சென்று மக்கள் பசியைப் போக்க அவர்கள் பாடுபட்டிருக்கிறார்கள். அவர்களை அடுத்து வந்த திருமூலர் அதைப் பெரிதாகச் சொல்லுகின்றார்.

"நேரடியாக இறைவனுக்குத் தொண்டு செய்வதைக் காட்டிலும் மக்களுக்குத் தொண்டு செய்வதுதான் மிகப் பெரிய அறமாகும்" என்பதை எடுத்துப் பேசுகின்றார் மாபெரும் சித்தராகிய திருமூலர்.

"படமாடக் கோயிற் பரமனுக்கு ஒன்று ஈயின் நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா"

என்று பேசுவார். பாம்பு அணிகின்ற பெருமானுக்கு நீ நேரே செய்கின்ற தொண்டு இருக்கிறதே அது உயிர்களுக்கு சென்று அடையாது. ஆனால்,

"நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றியில் படமாடக் கோயிற் பகவற்கு அது ஆமே"

நடமாடுகின்ற கோயில்களாக மக்களுக்கு ஒரு தொண்டு செய்வோமேயானால் அது நேரிடையாக இறைவனைச் சென்று சேரும், என்று சொல்லுகின்ற அளவுக்கு எட்டாம் நூற்றாண்டிலேயே மாபெரும் புரட்சியைச் செய்தவர் திருமூலர். அவரும் ஒரு சித்தர் தான். எனவே ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளில் ஆழ்வார் களும், நாயன்மார்களும் நாட்டில் உணவுப்