பக்கம்:அருளாளர்கள்.pdf/207

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


196 அருளாளர்கள்

பஞ்சமின்மையின் மக்கள் பசியைப் பெரிதாகக் கருத வில்லை. அதனால் அவர்கள் இதனைப் பெரிதுபடுத்த வில்லை. ஆனால் அதே நேரத்தில் பசித்து வருகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உணவு தர வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்தார்கள். பெரிய புராணத்தில் வருகின்ற அடியார்கள் வரலாறுகளைப் பார்ப்போமேயானால் வருகின்றவர்களுடைய பசியைப் போக்குவதையே ஒரு கடமையாகக் கொண்டிருந்தவர்கள் ஏறத்தாழ 40 சதவிகிதத்தினர். இளையான்குடிமாறர் போன்றவர்கள் வேறு எந்த ஒரு காரியமும் செய்ததாகத் தெரியவில்லை. யார் பசித்து வந்தாலும் அவர்களுடைய பசியைப் போக்குகிறார். எனவே இது தனிப்பட்டவர்கள் செய்கின்ற அறம். குடும்பமாக இருக்கின்ற இடத்தில் விருந்தோம்பல் முதலானவற்றை குடும்ப அறமாகச் செய்தார்கள். இந்தக் குடும்பமும், தனி மனிதனும் சேர்ந்து, சமுதாயமாக அமையும்போது அந்தச் சமுதாயம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆழமாகச் சிந்தித்து பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தைப் போக்குவதுதான் சமுதாயத்திலுள்ளவர்களுக்குக் &L-6&ID என்பதை வலியுறுத்திச் சொன்னார்கள். இதை சாதாரண மக்கள் ஒரளவுக்குக் கடைப் பிடித்தார்கள். மிகப் பெரிய ஞானிகள், சித்தர்கள், பெரியவர்கள் இதையே மாபெரும் கொள்கையாகக் கொண்டு கடைப்பிடித்தார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. ஆகவே மக்கள் பசியைப் போக்குவது மிகமிக இன்றியமையாத ஒன்று என்பதும், அதை இந்த நாட்டில் தோன்றிய எல்லாப் பெரியவர்களும் வலியுறுத்திக் கூறியிருக்கிறார்கள் என்பதும் நாம் அறிகின்ற ஒன்று. மக்கள்பசியைப் போக்குவதைப் பற்றி மணிமேகலை ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று மிக அற்புதமாகச் சொல்கிறது: உணவிடும் தொண்டை மறக்கவேயில்லை தமிழர்கள். என்றாலும் இறை