பக்கம்:அருளாளர்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் கண்ட வாழ்வு நெறி 2011

செய்ய வேண்டுமென்று நினைக்கிறார் என்றால் மிகப் பெரிய தத்துவத்தை இதில் அடக்குகிறார். வாடிய பயிரையும், மக்களையும் ஒன்றாகச் சொல்லுகிறார். மக்களுக்காக வருந்தினார் என்று சொல்வது வேறு. ஆனால் வாடிய பயிரைக் கண்டு உளம் வருந்தினேன் என்பதற்கு அடுத்தபடியாக மக்களைச் சொல்வது என்றால் இந்தப் பயிருக்கும், மக்களுக்கும் அவரைப் பொறுத்தமட்டில் வேறுபாடு காணவில்லை என்ற மாபெரும் தத்துவத்தை இங்கே நாம் அறிந்து கொள்ள வேண்டும். . . -

தொல்காப்பியக் கூற்றுப்படி ஒரறிவு உயிர் முதல் ஆறு அறிவுடைய உயிர்வர்க்கம் அனைத்தும் ஒன்று என்று மிகப் பழங்காலத்திலேயே கண்டவர்கள் தமிழர்கள். ஆனால் பிற்காலத்தில் என்ன காரணத்தினாலோ இது நம்மைவிட்டு மெல்ல மெல்ல மறைந்து போயிற்று. திரும்ப 19 ஆம் நூற்றாண்டில் வந்த வள்ளற் பெருமகனார் மிகப் பழையதாகிய நம்முடைய இந்தத் தத்துவத்தை எடுத்து உயிர்கள் அனைத்தும் ஒன்று, அது பயிராக இருந்தாலும் சரி-மக்கள் உயிராக இருந்தாலும் சரி, வருந்துகின்ற போது அந்த வருத்தம் பயிருக்கும் மக்களுக்கும் ஒன்று தான் என்று சொல்கின்ற மாபெரும் தத்துவத்தை இங்கே வள்ளற்பெருமான் பேசுவதை நாம் அறிய முடிகின்றது.

அதற்கடுத்தபடியாக உயிர் வர்க்கம் அனைத்தும் ஒன்று என்று கருதிய பிறகு அந்த உயிர்கள் படும் துன்பத்தைப் போக்க வேண்டும் என்ற நினைவு அதற் கடுத்தபடியாகத் தோன்றுகின்ற நிலை, அந்த நிலையிலே யும் மற்றொரு அடிப்படை என்னவென்றால் இந்த உயிர்கள் படுகின்ற துன்பம் அவரவர்கள் வினைவழி வந்தது. அதனை ஆண்டவன்தான் போக்க வேண்டு மென்று. நாம் இங்கு நம்மையும் அறியாமல் சமாதானம்

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/212&oldid=659546" இலிருந்து மீள்விக்கப்பட்டது