பக்கம்:அருளாளர்கள்.pdf/218

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வள்ளலார் கண்ட வாழ்வு நெறி 207

மண்மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்யாவுமென் வினையா லிடும்பை தீர்ந்தே இன்பமுற் றன்புட னிணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும், தேவதேவா! ஞானாகாசத்து நடுவே நின்று நான் ‘பூமண்டலத்தில் அன்பும் பொறையும் - விளங்குக, துன்பமு மிடிடைமையு நோவுஞ் சாவுநீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம் இன்புற்று வாழ்க’ என்பேன்! இதனை நீ திருச்செவிக் கொண்டு திருவுளமிரங்கி ‘அங்ஙனே யாகுக’ என்பாய், ஐயனே! இந்நாள், இப்பொழுதெனக் கிவ்வரத்தினை அருள்வாய் . . . . . . .

(விநாயகர் நான்மணி மாலை)

வள்ளலாரையும், பாரதியையும் தோய்ந்து கற்று விரிவாகப் பேசுபவர்கள்கூட அவர்கள் எய்திய இந்த உயர்வான நிலையைப் பற்றி அறிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. 2000 ஆண்டுகளாக தமிழகத்தில் ஊறியிருந்த ஒரு கொள்கையை ஏற்றுக்கொண்டு அதற்கு மேலே பலபடிகள் சென்று எல்லா உயிர்களின் துயரத்தைப் போக்கும் பணியைத்தான் செய்ய வேண்டும் என்று வடலூராரும், எட்டையபுரத்தாரும் கண்ட காட்சி தமிழ்ப் பண்பாட்டின் வளர்ச்சியில் ஒரு புதிய திருப்பம் என்பதை உணர வேண்டும். நாவரசர் பெருமான் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று கூறியதும், பாரதி, வள்ளலார் கூறியதும் ஒன்று அல்ல; வெவ்வேறானவை என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

தமக்கென வாழா பிறர்க்குரியாளன்