பக்கம்:அருளாளர்கள்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருமந்திரம்-பொருள்நிலை 13

அதாவது நமக்குள் நாமே கூட்டம் போட்டு முன்னரே அதுபற்றித் தெரிந்தவர்களிடம் திரும்பத் திரும்ப அதையே பேசுதல் போன்ற முறையை, மாற்றிக் கொண்டால் ஒழிய விரைவில் இந்நூல்கள் புதைபொருள்களாக மாறி நூல் நிலையங்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் நிலை ஏற்பட்டு விடும். எவ்வளவு உயர்ந்த நூல்களானால்தான் என்ன? அவற்றைப் போற்றிக் கற்பார் இலரேல் அவை மறைந்து போதல் இயல்புதானே!

ஓயாமல் மாணவர்களோடு பழகுகின்ற என் போன்ற வர்கள் மனத்தில் தோன்றுகிற அச்சமாகும் இது. இன்றைய மாணவர் சமுதாயம் இந்நூல்களை அறியாமல் வளர் கின்றது. நாளை இவர்கள் பெரியவர்களாகும் பொழுது என்ன ஆகும்? பொது மக்களோடு, அவருள்ளும் சிறப்பாக இளைஞர்களோடு பழகி அவர்களை நம் நெறிக்கு இழுக்காவிடின் என்ன நேரும் என்று சிந்தித்தது உண்டா? நாம் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு இந்த அருள் நூல்களைப் படிப்பதால் நாம் மட்டும் பயனடை வோமே தவிரச் சமுதாயத்திற்கு நம் கடமையை நிறை வேற்றியவர்களாக ஆவோமா? r

நம் முன்னோர்கள், அதிலும் குறிப்பாக இவ்வருள் நூல்களை ஆக்கித்தந்த பெரியோர்கள் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்பதையாவது சிந்தித்தோமா? திரு மந்திரமாகிய பெருநூலை ஆக்கித் தந்த பெருமகன் எங்கோ இருந்து இறைவனில் ஈடுபட்டிருக்க வேண்டியவர் ஏன் இங்கு வந்தார்? இறந்து போதல் என்பது இவ்வுலகின் இயல்பு என்று அவருக்குத் தெரியாதா? ஏன் இறந்தவன் உடம்பில் அவர் புக வேண்டும்? பின்னர் ஏன் இத் துணைப் பாடல்களை ஆக்க வேண்டும்; நம்மாட்டுக் கொண்ட கருணையினால்தான் இவற்றைச் செய்தார் என்று கூறத் தேவை இல்லை.