பக்கம்:அருளாளர்கள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 அருளாளர்கள்

தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.

                 (திருஅருட்பா-4979) ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்

ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்.

            (திருஅருட்பா-4082) என்று சொல்கிற பாடல்கள் மேலே சொன்ன கருத்தை விளக்கும்.
இவரை அடுத்து வந்த பாரதி இதே கருத்தைக் காணி நிலம் வேண்டும் என்று தொடங்கும் பாடலில்,

பாட்டுத் திறத்தாலே இவ்வையகத்தைப் பாலித்திட வேண்டும் பராசக்தி என்று பாடுகின்றார். ஆக இந்த இரண்டு பெரியவர்களும் சமுதாய நோக்கத்தோடு பாடினார்கள் என்பதையும் அறிய முடியும். வள்ளற்பெருமான் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியது அவருடைய பக்தியையோ, வளர்ச்சியையோ மட்டும் காட்டுவதற்காகப் பாடப்பட்டது என்று நினைப்போமேயானால் பெருந்தவறு இழைத்தவர்களாகிவிடுவோம். இந்தப் பெருமக்கள் பாடியதன் நோக்கம் இந்தப் பாட்டின் மூலமாக சமுதாயத்தை மாற்ற முடியும் என்ற கருத்தில்தான் அதையே வள்ளலாருக்குப் பின்னே வந்தவர் ஆகிய பாரதி இந்த இரண்டு பொருளையும் வைத்துக் கொண்டு நாட்டு மக்கள் நலமுற வாழவேண்டும். நானிலத்தவர் மேன்நிலை எய்தவும், அவர்கள் துன்பம் இல்லாமல் வாழவும் வேண்டும். ஆகையால் பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்திட வேண்டும் என்று சொல்கிறார். இதே கருத்தைத்தான் வள்ளற்பெருமானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/235&oldid=1292393" இலிருந்து மீள்விக்கப்பட்டது