பக்கம்:அருளாளர்கள்.pdf/236

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வள்ளலார் கண்ட வாழ்வு நெறி 225

தம் ஐந்தாயிரம் பாடல்கள் மூலம் செய்திருக்கிறார் என்பதை அறிவோமானால் வள்ளற் பெருமான் கண்ட வாழ்க்கை நெறி என்ன என்பது தெரியும்.

வள்ளற்பெருமான் கண்ட வாழ்க்கை நெறி என்ன என்பதைச் சுருக்கிக் கூற வேண்டுமானால் மாறுபட்ட சமயங்களோடு வாழ்கின்ற இந்த மனித சமுதாயத்தில் எல்லாச் சமயங்களையும் எடுத்துச் சாராகப் பிழிந்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய முறையில்,

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்சோதி

என்கிற ஒரு தாரக மந்திரத்தைத் தந்தார். மக்கள் இறைவனோடு தொடர்பு கொள்ள வேண்டுமேயானால் காடுகள் சென்று, கனசடை வைத்து பக்தி செய்ய வேண்டியதில்லை. அன்பு என்ற ஒன்றினாலேயே இறைவனை அடைய முடியும். ஆகவே, ‘அன்பெனும் பிடியுள் அகப்படு மலையே முதலான பாடல்களினால் இந்தத் தொடர்பு அன்புதான் என்பதைப் புதியதாகக் காட்டினார். அதற்கடுத்தபடியாக மனிதன் என்பவன் என்ன செய்ய வேண்டும் மக்கள் சமுதாயத்திற்கு என்றால்,

ஆருயிர்களுக்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே எந்தைநின தருட்புகழை இயம்பிடல் வேண்டும் முதலான பகுதிகளைச் சொல்லும்போது என்ன செய்ய வேண்டும் தொண்டிற்கு, தொண்டு எப்படி நடைபெற வேண்டும் என்பதை அழகாக எடுத்துக் காட்டுகிறார். ஒத்தாரும் உயர்ந்தாரும் உலகில் நடக்க வேண்டும் என்று சொல்லும்போது வேறு பாடற்ற ஓர் அற்புதமான