பக்கம்:அருளாளர்கள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20 அருளாளர்கள்

படைத்திருப்பினும் செல்வத்திற் புரண்டாலும் மனவாழ்வு நிரம்பாவிட்டால் எஞ்சுவது வெறுப்பே ஆகும், என்பதை அவர்கள் அறியத் தலைப்பட்டு, பின்னர் மனத்துக்கும் உடலுக்குமுள்ள தொடர்பை ஆய்ந்தனர். உடலுக்குத் தலைவனாக மனம் இருத்தலின் மனத்தை அடக்கினா லொழியப் பொறிபுலன் அடக்கம் பயனற்றது என்பதை அவர்களும் அறியத் தொடங்கிவிட்டமையின் அமைதி யான வாழ்வு (Relaxed Lift)வேண்டும் என்று கூறுகின்றனர்.

பொறிகளை அடக்குவது என்பது இயற்கையை எதிர்த்துச் செய்யும் போராட்டம் என்பதையும், அதனால் எவ்வித நற்பயனும் விளைவதில்லை என்பதையும் திருமூலர் ‘அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார், அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை என்று கூறிப் போனார். இதன் அடிப்படை யாதாக இருக்கும் என்று யாரேனும் சைவர்கள் என்று மார்தட்டிக் கொள்பவர்கள் நின்று சிந்தித்துப் பார்த்ததுண்டா? பொறிகளையும் புலன் களையும் படைத்த இறைவன் பைத்தியக்காரன்அல்லனே! பொறிகளைப் படைத்து இவற்றால் அனுபவிக்கப்படும் பொருள்களாகிய தனு, கரண, புவன போகங்களையும் படைத்துக் கொடுத்த பிறகு இவற்றால் அவற்றை அனுபவிக்கக்கூடாது என்றுகூறுவது எப்படி அறிவுடைமை யாகும்? பொறிபுலன்களைத் தந்த இறைவன் அவற்றின் துணை கொண்டு எவற்றை அனுபவிக்க வேண்டும் என்று முடிவு செய்தற்குரிய பகுத்தறிவை மட்டும் நம்மிடமே தந்து விட்டான். எனவே இவற்றைத் தவறான வழியிற் செலுத்திவிட்டுப் பொறிகளையோ, அவற்றைப் படைத்தவனையோ, குறைகூறுதல் பெருந்தவறாகும்.

இன்று பணம் பெருத்த நாடாகிய அமெரிக்காவில் தோன்றி வளரும் புதிய கூட்டம் எது என்று நினைக்கிறீர்கள்? ஹிப்பிகள் எனப்பெறும் கூட்டத்தார்