பக்கம்:அருளாளர்கள்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருமந்திரம்-பொருள்நிலை 25

என்பதையும் இருதயநோய் உடையார் தாக்கப்படும் போது முன் எச்சரிக்கை எதுவும் இராது என்பதையும் எத்துணை அழகாக கூறுகிறார்.

“அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடி யாரொடு மந்தணம் கொண்டார் இடப்பக்கமே இறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே!’ (திரு-148)

என்பது அவர் வாக்கு,

வாழ்க்கை எத்துணை மென்மையானது எவ்வளவு விரைவில் முடியக்கூடியது; என்பதை இவண் காட்டும் திருமூலர் மனிதன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழவும் முடியும் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளார். இவ்வாறு மாறுபட்ட கருத்துக்களைத் திருமூலர் தேவை இல்லாமற் கூறவில்லை. அதற்கொரு ஆழமான காரணமுண்டு.

ஓரறிவுயிராகிய அமீபா (Amoeba விலிருந்து ஆறறிவு படைத்த மனிதன் ஈறாக அனைவருக்கும் பொதுவான இயல்பாக ஏதேனும் உண்டா? உண்டு. அதுவே துன்பத்தை வெறுத்தலும் இன்பத்தை நாடலுமாம். இந்த உயிர் இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு திருமூலர் துன்பத்தை எடுத்துக் காட்டுகிறார். இதனை வெறுக்கும் உணர்ச்சியைத் துTண்டிவிட்டு அடுத்து இன்பத்தை அடையும் வழியைக் கூறுகிறார். ஒவ்வொரு துன்பமாகக் களைந்தாலும் அது வேண்டப்படுவதேயாகும்.

‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்’ (குறள்-34) என்பது பொதுமறை. ஆனால் ஒவ்வொரு துன்பமாகக் கொண்டு களைவதென்பது மரத்தின் ஒவ்வொரு