பக்கம்:அருளாளர்கள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


24 அருளாளர்கள்

எதிர்த்துப் புதுவழி கண்டார் என்றோ யாரும் குறை கூறத் துணிவதில்லை அன்றோ?

தோத்திர வழி (பக்தி வழி), சாத்திர வழி என்ற இரண்டும் மக்கள் முன்னர் வைக்கப்பட்டன. அவரவர் பக்குவத்திற்கேற்ப அவரவர் தாம் மேற் கொள்ளும் வழியை அறிந்து ஏற்றுக் கொண்டனர். இனிப்புப் பண்டமும் காரப்பண்டமும் பசியைப் போக்க உதவுகின்றனவெனில் ஒன்றிற்கொன்று உயர்வு தாழ்வு கற்பிப்பது எங்ஙனம்? இதை நன்கு புரிந்து கொண்டால் சாத்திர வழிக்காரர்கள் தோத்திர வழிக்காரர்களை மறுத்துறைக்கவோ இவர்கள் அவர்களை மறுத்துரைப்பதற் கோ வழி இல்லாமற் போய்விடும்.

இக்கருத்து நம்முடைய நாட்டைப் பொறுத்தவரை புதுமையானதன்று. திருமுருகாற்றுப்படை ஆசிரியர் இதனை வலியுறுத்திக் கூறினார். சேவடி படரும் செம்மல் உள்ளம் ஒன்றுதான் தேவையானது. அதுமட்டும் இருந்து விட்டால் இன்னே பெறுதி நீ முன்னிய வினையே’ என்று கூறுகிறார். வேண்டப்படுவன, ஒரு குறிக்கோளும் நெஞ்சில் உறுதியுமேயாம். அவை இருக்குமானால் எந்தவழியை மேற் கொண்டாலும் தவறில்லை. இறுதியில் பயன் பெறமுடியும்.

உலகையும் அது இருக்கும் சூழ்நிலையையும் நன்கு எடுத்துக் காட்டுகிறார் திருமூலர். நிலையற்ற உலகம் என்பதனால் அதனை அனுபவிக்கக்கூடாது என்ற கருத்தில்லை. ஆனால் இந்த அனுபவமே எல்லாம்’ என்று நினைக்கின்ற தவற்றை மனிதன் செய்துவிடக்கூடாது என்பதே அவருடைய நோக்கம். மனிதனுக்கு இருதயம் என்ற ஒன்று இருக்கிறது என்பதையே பிறநாட்டார் அறிந்து கூறுவதற்கு முன்னர் திருமூலர் அது இருப்பதையும் அதுவும் இடப்பக்கத்தில் இருப்பதையும், அது தாக்கப்பட்டால் இறப்பு வெகு விரைவில் கிட்டும்