பக்கம்:அருளாளர்கள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருமந்திரம்-பொருள்நிலை 27

சிவத்தை வணங்குவது என்ற விடை வரும். சிவம்’ என்றால் என்ன என்ற வினாவிற்கு ‘அன்பே சிவம்’ என்ற விடையை மூலர் தருகிறார். அப்படியானால் சிவனை வணங்குதலும், சிவத்தோடு இரண்டறக் கலத்தலும் வேண்டப்படுவன என்று கூறுவதால் தவறில்லை.

அன்புடன் கலத்தல் என்பது அன்பே வடிவாக ஆதல் எனப் பொருள்படும். அன்பே வடிவாக ஆகிறவர்கள் பிற உயிர்கட்குத் தொண்டு செய்வதே அன்புடன் கலத்தல் அல்லது சிவத்துடன் கலத்தல் என்று தருக்கரீதியாகக் கூறிவிடலாம். இவ்வுண்மையை அறியாமலும், அறிய மறுத்தும் இறைவனை வழிபட்டு வேறு ஏதோ பயனை அடையப் போவதாக நினைப்பவர்கள் யார் என்ற வினாவை எழுப்பிக் கொண்ட மூலர், அவர்கள் சிவ’ தத்துவத்தை அறியாத அறிவிலிகள் என்ற கருத்தில் ‘அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்’ என்றும் கூறிப்போனார்.

சிவ வழிபாடு என்பது உயிர்கள்மாட்டு அன்பு கொண்டு தொண்டு செய்தலே என்பதை இத்துணை அழகாகவும், விளக்கமாகவும், தருக்க முறையிலும், கூறி யுள்ளனர் நம் முன்னோர் என்பதை இக்காலத்துக்கேற்ப எடுத்துக்காட்டாத நாம் சைவர்களா? இல்லை, சைபர்கள்.

“நல்லவும் தீயவும் அல்ல குவிமுகிழ்

புல்லிதழ் எருக்கம் ஆயினும் உடையவை கடவுள் பேணேம் என்னா ’’ (புறம்-106)

என்று பழைய புறநானூறு கூறவும் “யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை’ என்று மூலர் கூறவும்,

‘ஐய யாஅம் இரப்பவை, பொருளும் பொன்னும் போகமும் அல்ல;