பக்கம்:அருளாளர்கள்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 அருளாளர்கள்

நின்பால் அருளும் அன்பும் அறனும், என்றாங்கு உருளினர்க் கடம்பின் ஒலிதா ரோயே!

(பரி. 5 : 78-8)

என்று பரிபாடல் கூறவும் அவற்றை ஏற்கும் மிக உயர்ந்த நிலையில் இருந்த சைவ சமயம், இன்ன பூவுக்கு இன்ன பயன் என்று கூறும் இழிநிலைக்கு வந்தமையாலே இன்று அது கேட்பாரற்றுக் கிடக்கிறது.

மிகப் பழமையான நம்முடைய சமயம் எத்துணைப் பரந்த மனப்பான்மையுடன் யாவரையும் தன்னுள் அணைத்துக் கொண்டு வளர்ந்தது என்பதை நினைக்கை யில் உண்மையான பரவசமும் பெருமிதமும் அடையலாம். உயர்ந்தார், தாழ்ந்தார், கற்றார், கல்லாதார், உடையார், இல்லார் என்ற வேறு பாடற்று அர்த்த் மற்ற சடங்குகட்கு இடந்தாராமல் எல்லா உயிர்களிடத்தும் இறைவன் உறைகின்றான் ஆகலின் உயிர்கட்குத் தொண்டு செய்வதே சமயத் தொண்டு என்ற மிக உயர்ந்த குறிக்கோளுடன் இருந்த சமயம் எங்கே? இத்துணை உயர்ந்த நிலையிலிருந்த சைவம் அடுத்த காலத்தில் வெள்ளியில் இலிங்க வடிவம் வைத்து வழிபட்டால் என்ன பயன்? தங்கத்தில் வைத்து வழிபட்டால் என்ன பயன்? என்றும், வெள்ளை மலரால் அருச்சித்தால் என்ன பயன் கிட்டும்? சிவப்பு மலரால் அருச்சித்தால் என்ன பயன் கிட்டும் என்றும் சாத்திரம் வகுக்கத் தொடங்கிவிட்டது. சிவபூசையை ஒரு வியாபார மாக்கிய பெருமை பிற்காலச் சாத்திரங்கட்கு (அவற்றின் பெயரைக் கூற விரும்பவில்லை) உரியதாகும்.

புறச் சமயத்திலிருந்து மீண்ட திருநாவுக்கரசர் ‘பிராயச்சித்தம்’ செய்துகொண்டா GU), fourfroTITsr P எத்தகைய மனநிலை உடையாருக்கும் உய்கதி காட்டுகின்ற முறையில் இருந்த சமயம், மக்கள் வாழ்க்கையில்