பக்கம்:அருளாளர்கள்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. நடராஜ தத்துவம்

இது விஞ்ஞான யுகம். எந்த ஒன்றையும் அறிவின் துணைக்கொண்டு ஆராய்ந்து உண்மை காண வேண்டும் என்று நினைப்பது விஞ்ஞானத்தின் அடிப்படை.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜடப்பொருட்களை ஆராய்ந்த விஞ்ஞானம், அவற்றைப் பகுத்துக் கொண்டே சென்று, இறுதியாக எஞ்சி நிற்கும் மூலக் கூறு பிரிக்கமுடியாத ஒன்று என்ற முடிவுக்கு வந்தது, உடைக்க முடியாத அந்த மூலக்கூறுக்கு 'உடைக்க முடியாதது'என்ற பொருளைத் தரும் 'அதோமா’ என்ற லத்தீன் மொழிப் பெயரைச் சூட்டிற்று. அப்பெயர் தான் இப்போது ஆங்கிலத்தில் 'Atom'என வழங்கப்படுகிறது.

ஆனால், இந்த முடிவுக்கு வந்த சில ஆண்டுகளில் உடைக்க முடியாதது என்று கருதப்பெற்ற அந்த மூலக்கூறு உடைக்கப்பட்டு, ‘எலக்ட்ரான்’, புரோட்டான்’ பாசிட்ரான்’, ‘நியூட்ரான்’, ‘மீசான்’ முதலான பல பொருட்கள் அதனுள் இருப்பதை விஞ்ஞானம் கண்டது.

இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில், தனி மூலக்கூறாக இருந்த அணு, பல உட்பொருட்களைக் கொண்டிருப்பதை அறிந்து சொல்வதற்கு 1200 ஆண்டு களுக்கு முன்னரே இத்தமிழகத்தில் வாழ்ந்த ஒரு மெஞ்ஞான-சிவனடியார், போகிற போக்கில் தான் பாடிய திருவாசகத்தில்,

“சென்று சென்று அணுவாய்,

தேய்ந்து தேய்ந்து ஒன்றாய்,
நின்ற நின் தன்மை"(திருவாசகம் 22-7) என்று பாடிச் செல்கிறார்.

“அணுவிற்கணுவாய்”