பக்கம்:அருளாளர்கள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

நடராஜ தத்துவம்


4. திருவாசகங் காட்டும் திருநெறி

இன்று உலகாயதத்தில் ஆழ்ந்துள்ள மேலைநாடு மட்டுமே சிறிது கடவுளுணர்ச்சியுடைய பாடல்களையும், அவற்றை இயற்றிய புலவர்களையும் கண்டு போற்றல் கூடும். விலங்கு வலிமையின்முன்னர் அடி பணியும் ஒரு நாகரிகம் இப்புது நூல்களைப் போற்றுவதில் வியப்பொன் றும் இல்லை. ஆனால், இறையுணர்வு பாலோடுசேர்த்து ஊட்டப்பெற்று வளர்ந்த தமிழ்நாட்டார் இப்புதுப்பாடல் களிடத்து எத்துணைப் புதுமையுங் காணப்பெறார். இனி, எத்துணைக்காலம் நாம் முன்னேறிச் செல்லினும் அக்கால ஆராய்ச்சி அறிவினாலுங்கூடக் கண்டு வியக்கத்தக்க அரும் பொருள்களைப் பல பெரியோர்கள் இந்நாட்டில் இயற்றிப் போயினர். அத்தகைய காலதேச வர்த்தமானங் கடந்த கருவூலங்களுள் தலை சிறந்தது திருவாசகமாம்.

இத்தகைய அரியதொரு நூலை இவ்வுலகிற்கீந்த பெரியார் மாணிக்கவாசகப் பெருமானார் எனப்படுவர்.

இத்திருநூல் உலகிடைப் பிறந்து, பிறப்பு, பிணி, மூப்பு, இறப்புத் துன்பங்களால் வருந்தும் உயிர்க்கு அவற்றி னின்றும் விடுபெற்று வீடு பெறுதற்குரியதோர் திருநெறி காட்டியருளுகின்றது. இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியதே போன்று மணிவாசகனார் போன்ற பெரியார்கள் புகையிரதத் தொடரின் இயந்திரங்களாவர். அவ்வியந்திரம் தானேயுமன்றித் தன்னைத் தொடர்ந்த ஊர்திகளையும் குறித்தவிடத்திற்கு இழுத்துச் செல்வதே போன்று இப் பெரியார்களும் தாமேயுமன்றித் தம்மைத் தொடர்ந்த அடியார்களையும் வீடுபேற்றிற்கு உய்த்துச் செல்லும் பேராற்றல் படைத்தவராயிருக்கின்ற்னர்.இத்தகைய