பக்கம்:அருளாளர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருளாளர்கள்

38


38 அருளாளர்கள்

“மாதர்தம் கூர்த்த நயனக் கொள்ளையில்

பிழைத்தும், பித்த உலகர் பெருந்துறைப் பரப்பினுள் மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும்

கல்வியென்னும் பல்கடற் பிழைத்தும், செல்வம் என்னும் அல்லலில்

பிழைத்தும், நல்குரஎன்னும் தொல்விடம்

பிழைத்தும்’ (திருவா4,34) இறுதியில் தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகின்றது. ஒருவாறு இச்சித்தம் உண்டாகியும் அவ்ஆன்மா அடையும் இன்னல்கள் தீர்ந்ததோ! பின்னரும் ஆறுகோடி மாயாசக்திகள் வேலை தொடங்குகின்றன. நாத்திகமும், சமயவாதிகளும், மாயாவாதமும் சேர்ந்து தொல்லை விளைவிக்கின்றன.

இவ்வின்னல்களினிடையே ஆன்மா எவ்வாறு இறைவனைத் தேடல்வேண்டும் என்று, தலைவனைக் கண்ணுற் கண்ட தலைவர் கூறுகின்றார்.

“தப்பாமே தாம்பிடித்தது சலியாத்

தழலது கண்ட மெழுகது போலத் தொழுதுளமுருகி, உழுதுடல் கம்பித்து,

ஆடியும், அலறியும், பாடியும், பரவியும், கொடிறும் பேதையும் கொண்டது விடாதெனும்

படியேயாகி, நல்லிடையறா அன்பில் பசுமரத்தாணி அறைந்தாற் போல”

- (திருவா4.59-64)

தலைவனை வழிபடல் வேண்டும். அவ்வாறு வழிபடத் தொடங்கியவுடன் பல இன்னல்கள் தோன்றுகின்றன. முதன்மையாக, பிறர் வழிபடுவோனைக் கண்டு எள்ளிக் கூறும் மொழிகளாம். உலகிடை இன்பமே சிறந்தது என்று நினைக்கும் பிறர் அத்தகைய அன்பனைக் கண்டு 'பித்தன்’ எனப் பேச முற்படுகின்றனர். காரைக்கால் அம்மையார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/47&oldid=1291398" இலிருந்து மீள்விக்கப்பட்டது