பக்கம்:அருளாளர்கள்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருவாசகத்தில் விஞ்ஞானம் 47

விஞ்ஞானப் புதுமைகளுடன் எவ்வளவு ஒத்துள்ளன எனக் காண்போம். அண்டப்பகுதி என்று பெருமான் கூறியதை இற்றை நாளில் Universe என்று கூறுகிறோம். அதில் உள்ள உண்டைப்பிறக்கம்’ என்பதனை Galaxies என்று கூறுகிறோம். நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன. என்பதனை “Expanding Universe’ என்கிறோம். ‘அண்டமாகிய பெரும் பகுதியில் நூறு கோடியின் மேலாக உண்டைகள் பெருக்க முற்று விரிந்தன என்கிறார் பெருமான். பக்தர் ஒருவர் பக்தி மேலிட்டால் கண்ணை மூடிக்கொண்டு அளந்தவை'யல்ல இவை என்பதை நன்கு மனத்தில் பதித்துக்கொண்டு கீழ்வரும் விஞ்ஞானிகள் கூறும் கூற்றைச் சற்றுக் காணவேண்டும்.

ஐன்ஸ்டீனின் கணக்கின்படி இவ்வண்டத்தின் அரைவிட்டம் (radius) 85 கோடி ஒளி வருடங்கள். இதனை நாமறிந்த மைல் கணக்கில் 210-ன் பிறகு 21 பூஜ்யங்கள் எழுதவேண்டும்; அதனைப் படிக்கக் கூடியவர்கள் படித்துப் பார்க்கட்டும். ஒரு வினாடிக்கு 186,000 மைல்கள் வேகம் செல்லக்கூடிய சூரிய ஒளியானது அண்டத்தில் ஓரிடத்தில் புறப்பட்டு அதனைச் சுற்றிக்கொண்டு மீட்டும் புறப்பட்ட இடத்திற்குவர 200 கோடி மானிட வருடங்கள் ஆகும். மணிவாசகப் பெருமான் கூறியபடி அண்டப்

1 Applied to Einstein’s field equations this figure yields a positive value for the curvature of the universe, which in turn reveals that the radius of the universe is 35 billion light years or 210,000,000,000,000,000,000,000 miles, Einstein’s universe, while not infinite, is nevertheless sufficient by enormous to encompass billions of galaxies, each containing millions of flaming stars and incalculable quantities of rarefied gas, cold systems of iron and stone and cosmic dust . A sunbeam, setting out through space at