பக்கம்:அருளாளர்கள்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


48 அருளாளர்கள்

அறிவு அவர்களுடைய பக்திக்கும் உருக்கத்திற்கும்

தடையாக அமையவில்லை என்பது மட்டுமன்று, அரணாகவும் அமைந்ததைத் திருவாசகம் போன்ற நூல்கள் எடுத்துக் காட்டுகின்றன. மணிவாசகப் பெருமான்

பெற்றிருந்த விஞ்ஞான அறிவு அவருடைய பக்திக்கு இடையூறாக அமையவில்லை. இதோ ஓர் உதாரணம். திரு அண்டப் பகுதி என்பது திருவாசகத்தில் உள்ள மூன்றாவது அகவல். இப் பாடலினுக்கு விளக்கம் தர வந்த இடைக்காலப் பெரியோர்கள் சிவனது தூல சூக்குமத்தை வியந்தது என்று கூறினார்கள். இப் பாடலின் முதல் ஐந்து வரிகள் மட்டும் கீழே தரப்படுகின்றன.

‘அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந் தன்மை வளப்பெரும் காட்சி ஒன்றனுக்கு ஒன்று நின்றளழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இல்நுழை கதிரின் துன்அனுப் புரையச்

சிறிய ஆகப் பெரியோன். ‘

திருவா-31

இதன் பொருள்: அண்டமாகிய பேருலகின் பகுதிகளின் உருண்டை வடிவமான பெருக்கம் அளத்தற்கரிய தன்மை யுடையனவாய், வளமிக்க காட்சியுடையனவாய், ஒன்றை யொன்று அடுத்து நிற்கும் நிலையினை அளவிட்டுக் கூறப் புகுந்தால் நூறுகோடியின் மேம்பட்டனவாகும். இத் துணைப் பெரிய அண்டம் முழுவதும், வீட்டினுள் இருளில் நுழையும் சூரியகிரணங்களில் காணப்பெறும் சிறிய அணுக்கள்போல உள்ளது என்று கூறும்படி அவ்வளவு பெரியோனாக விரிந்தும் பரந்தும் உள்ளான் இறைவன்.’ - -

- இப்பாடலில் காணப்பெறும் சில விஞ்ஞான உண்மை களை மட்டும் எடுத்துக்கொண்டு அவை தற்கால