பக்கம்:அருளாளர்கள்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58 அருளாளர்கள்

நம் நண்பர் ஒருவரைப் பற்றி நாம் நன்கு தெரிந்திருக்கலாம், அறிந்தும் இருக்கலாம். அவருடைய பண்புகளைத் தெரிந்தும் இருக்கலாம். ஆனால் அவருடைய பெயரைக் கேட்டமாத்திரத்தில் நம்முடைய மனத்தில் ஓர் உணர்ச்சி தோன்ற வேண்டுமாயின் அது வேறு விஷயம். இங்ஙனம் உணர்ச்சி தோன்றுதல் என்பது அத்துணை எளிதான காரியமன்று. அவருடன் நெருங்கி நேரிடையாகத் தொடர்பு கொண்டிருந்தாலொழிய உணர்ச்சி தோன்றுதல் என்பது இயலாத காரியம். ஒரு பொருளிடமோ, அன்றி ஒருவரிடமோ உணர்ச்சி தோன்ற வேண்டுமாயின் அப்பொருளைக் கண்டு, பலகாலும் பழகி அப்பொருளினிடம் ஈடுபாடு கொண்டிருந்தால்தான் முடியும். மேலே சொன்ன இந்த இலக்கணத்தை நன்கு அறிந்த பிறகுதான் ஆழ்வார்கள் இறைவனிடம் கொண்ட ஈடுபாட்டை ஓரளவு நாம் அறிய முடிகிறது.

‘கண்ணுல் யானும் கண்டேன் காண்க' (திருமுறை: 8, 3, 58) என்றும்,

‘கரந்ததோர் உருவே, களித்தனன்

                உன்னைக் 

கண்ணுறக் கண்டு கொண்டுஇன்றே'

 (திருமுறை: 8, 22, 6) என்றும் பாடுகிறார் மாணிக்கவாசகப் பெருமான், கண்ணுல் என்ற சொல்லில் உள்ள ‘ஆல்’ உருபும், யானும் என்பதிலுள்ள ‘உம்’ என்ற இடைச் சொல்லும் ஆழ்ந்து கவனிக்கத்தக்கவை. இறைவன் குறி குணம் ஒன்றும் இல்லாதவன்; கற்பனை கடந்து நிற்பவன். அத்தகைய ஒருவனைக் கருத்தால் காண்டலே முடியும். ஆனால் யான் கண்ணாலும் கண்டேன் என்று கூறுகிறார். கண்ணாலும்