பக்கம்:அருளாளர்கள்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 அருளாளர்கள்


‘மறப்பு இலா என்னைத் தன்னாக்கி, என்னால் தன்னை உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே??

(நாலா. 2840)

‘என் நெஞ்சத்து உள்ளிருந்து, இங்கு இருந்தமிழ்

நூல் இவை மொழிந்து வன். நெஞ்சத்து இரணியனை மார்பு இடந்த - வாட்டாற்றான்’ ’’

(நாலா: 3132)

இனிய கவிகள் பாடும் பரம கவிகள் பலரும் இருக்க என்னை ஏன் வந்து ஆட்கொண்டான் என்று அதிசயிக்கின்றார் ஆழ்வார். அவ்வாறு இறைவன் வந்து ஆட் கொள்வதற்குரிய காரணம் கூறுவார் போன்று அடுத்துக் காட்டப் பெற்ற பாடலில் மறப்பு இல என்னை” என்று கூறுகிறார். இறைவனை என்றும் மறவாமல் மனத்துட் பதித்திருந்தமையின் அவன் வந்து ஆட்கொள்ளவும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டது போலும். அப்பெருமானும் ஒரு தனிச் சிறப்புடையவன் என்பதை மூன்றாவது எடுத்துக் காட்டு விளக்குகின்றது. ஒருவனை நெஞ்சத்து (ஆழ்வார்) உள்புகுந்து தன்னைத்தானே கவி பாடினானாம். மற்றொருவன் நெஞ்சத்து உட்புக மறுத்து அவன் மார்பைப் பிளந்தானாம். இதனால் ஒருவன் நெஞ்சந் திறந்திருப்பின் அதன்வழி உட்புகுந்து அவனுக்கு அருள் செய்கின்ற பெருமான் அந்நெஞ்சு திறவாமல் அடை பட்டபொழுதும் விட்டு விடுவதில்லையாம். அடைப்பட்ட அதனைப் பிளந்து சென்றும் அருள் செய்கின்றானாம். முதலது அறக் கருணையின்பாற்படுதலும் பின்னது மறக் கருணையின்பாற்படுதலும் அறியற்பாலன.