68 அருளாளர்கள்
‘எனது ஆவி யார்? யான் ஆர்? தந்த நீ கொண்டாக்கினையே’ (நாலா 22:7)
என்று நம்மாழ்வாரும் பேசி இத்தகைய அருளுக்குச் செய்ய வேண்டிய கைம்மாறு யாது எனத் தெரியாமல் மயங்கி நிற்கின்றனர். இவ்விருவரும்.
“எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்! யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே,’’
(திருமுறை: 8, 22, 10) நம்மையும் ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மை (திருமுறை 8, 51, 9)
என்று மணிவாசகர் பேசுவதும், நம்மாழ்வார்,
‘கருளப் புள்கொடி, சக்கரப்படை, வானநாட!
என்கார் முகில் வண்ணா!
பொருளல்லாத என்னைப் பொருளாக்கி
அடிமை கொண்டாய்!
தெருள்கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ்
சிரிவர மங்கல நகர்க்கு
அருள்செய்து அங்கு இருந்தாய்! அறியேன்
ஒரு கைம்மாறே!
(நாலா 2592)
என்று பேசுவதும் இறைவன் இன்னருளுக்குக் கைம்மாறு இல்லை என்று கவல்வதினாலேயாம்.
இங்ஙனம் இவர்களை வந்து ஆட்கொள்ளுகின்ற இறைவன் பிறர் அறியா நிலையில், ஏன், இவர்களே அறியா நிலையில் உட்புகுந்துவிடுகிறான். புகுந்த பின்னர் ஏற்படும் அனுபவ உணர்வாலேயே அவன் புகுந்ததை அறிகின்றனர் இப்பெரியார். இறைவன் வர வேண்டும்