உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மாழ்வார. 67


என்று காத்து நிற்கையில் அவன் வரவில்லையாம். பல சமயங்களில் வருவதுபோலக் காட்டி வாரா தொழிந்தானாம்.

“``தாமரைக் கண்ணா! ஓ! தனியேன் தனி ஆளா! ஓ! தாமரைக் கையா! ஒ! உன்னை என்று கொல்``

சார்வதுவே! (நாலா 2799)

இனி அவனைக் காணவேண்டும் என்ற ஆர்வமும் எல்லையற்றுச் செல்கையால் பிறர் கண்டு ஐயோ! பாவம் என்று கூறத் தக்க நிலையும் ஏற்படுகிறதாம்.

‘``கங்குலும் பகலும் கண்துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்``

எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்

இருநிலம் கைதுழா இருக்கும் செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்!

இவள் திறந்து என் செய்கின்றாயோ?

(நாலா 2755)

அழும்; தொழும்; ஆவி அனல் எவ்வுயிர்க்கும்

அஞ்சன வண்ணனே! என்னும்

எழுந்து, மேல் நோக்கி, இமைப்பிலன் இருக்கும்,

எங்கனே நோக்குகேன்? என்னும்’

(நாலா: 2762) ‘ஆறா அன்பில் அடியேன் உன் அடிசேர் வண்ணம்

. அருளாயே’

(நாலா. 2734)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/76&oldid=1291990" இலிருந்து மீள்விக்கப்பட்டது