பக்கம்:அருளாளர்கள்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 இதனை நன்கு விளங்கிக் கொண்டால்தான் இறைவன் என்னுட் கலந்து தன்னைக் தானே இன்தமிழ் பாடினான் என்று கூறுவதன் உட்பொருள் விளங்கும்.

         ‘என்நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல்
                         இவை மொழிந்து’
                                                       (நாலா. 3132)
                                                          
                                                 

என்று கூறியது உபசார வழக்கன்று, உண்மை வழக்கே என்பது நன்கு விளங்கும். அன்றியும் ஞானசம்பந்தர், நம்மாழ்வார் போன்ற பெரியோர்கள் தம் பதிகங்களின் இறுதிப்பாடல்களில், இப்பதிகங்களை பாடுவதால் இன்ன பயன் விளையும் என்று கூறியுள்ளதன் உட்பொருளையும் அறிதல் வேண்டும்.

   எத்துணைப் பெரியவராயினும் ஒருவர் தம் பாடல்களைப் பாடினால் இன்ன பயன் விளையும் என்று கூறுவது பொருத்தமா? அது அவர்களுடைய அகஙகாரத்தை அல்லவா வெளியிடுகிறது? அங்கனம் இருக்க இவர்களைப் பெரியோர்கள் என்று குறிப்பிடுவது பொருந்துமா என்பன போன்ற வினாக்கள் சிலருடைய மனத்திலாவது தோன்றத்தான் செய்யும். இவற்றிற்கு விடைகாணு முன்னர் அகங்காரம் மமகாரம் ஆகிய இரண்டையும் அறிதல் வேண்டும். 'நான்’ என்ற முனைப்பு அகங்காரம் என்றும் 'எனது' என்ற 'பற்று' மமகாரம் என்றும் பேசப்படுகிறது. நான் என்ற ஒரு பொருள் பிறவற்றின் கலப்பில்லாமல் இருக்கும் பொழுது அதனை அகங்கார ஸ்வரூபம் என்று கூறுகிறோம். ஆனால் நான் என்ற தனிப்பொருள் இறைவன் என்ற பெரும் பொருளில் கரைந்துவிடுமேயானால் அங்கே 'நான்’ என்ற பொருள் இல்லை. தண்ணிரில் கலந்து உப்பு எங்கும் பரந்து நிற்பது