பக்கம்:அருளாளர்கள்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நம்மாழ்வார் 77

விளக்கும். ஆதலால்தான் எங்கும், எவ்விடத்தும், எல்லாக் காலத்தும், எப்பொருளிலும் இறைவனையே இப்பெரியோர்.

‘மண்ணை இருந்து துழாவி

வாமனன் மண் இது என்னும்

விண்ணைத் தொழுது, அவன்மேவு

வைகுந்தம் என்று, !

கண்டனர்

(ETSom: 2447) ‘அறியும் செந்தியைத் தழுவி

அச்சுதன் என்னும் மெய் வேவாள்’ ‘எறியும் தண் காற்றைத் தழுவி

என்னுடைக் கோவிந்தன் என்னும்’

(நாலா: 2449) ‘கோமள ஆன் கன்றைப் புல்கிக்

கோவிந்தன் மேய்த்தன என்னும் போம்இள நாகத்தின் பின்போய்

அவன் கிடக்கை ஈது என்னும்’

(நாலா 2451) நான் என்ற பொருளை முற்றிலும் அவன் என்ற பொருளில் கரைத்து விட்டவர்கள் மனநிலைக்கு ஓர் எடுத்துக் காட்டாகும் இப்பாடல்கள். ஆனால் இந்த நிலையை அடைவதற்கு இப்பெருமக்கள் மேற்கொண்ட வழியை எடுத்துக்கூறுவது போன்றுள்ளது திருநாவுக்கரச ருடைய ஒரு பாடல். .

“முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம்கேட்டாள்

பின்னை அவனுடைய ஆளுர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்

அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்