பக்கம்:அருளாளர்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 * அருளாளர்கள்



மக்கள் வாழ்க்கையில் ஏற்படுகின்ற துயரம் பற்றியும், பொறிபுலன்களால் ஏற்படும் அல்லல் பற்றியும் இவர் களுடைய பாடல்களில் அதிகங்காண இயலாது. நாயன்மார்களுள் அதிகமான பாடல்கள் பாடியவர் ஞானசம்பந்தர். எனினும், பிற ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களிற் காணப்பெறும் மானிட வாழ்வின் துயரம்பற்றிய கருத்துக்களை இவ்விருபெரியோர்களின் பாடல்களிற் காண இயலாது. அதற்குறிய பல்வேறு காரணங்களுள் அவர்களுடைய இளைமையும் ஒரு முக்கிய மான காாரணம் ஆகும் என்பதை மறத்தல் கூடாது.

அப்படியானால் பொறிபுலன்களால் ஏற்படும் துன்பங்கள் இவர்களைப் பாதிக்கவே இல்லையா என்ற வினாத் தோன்றும். அதற்கு விடை கூறும் முறையில் ஒரு சில பாடல்கள் அமைந்துள்ளன. இப்பாடல்களைப் பார்த்த மாத்திரத்தில் இவர்கட்கும் பொறிபுலன்களால் இத்துணைத் துன்பம் ஏற்பட்டதோ என்று யாரும் ஐயுற வேண்டா. இப் பொறிபுலன்கள் தாம் இருப்பதை என்றோ ஒரு நாள் இவர்கட்கு நினைவூட்டின போலும். பெரியோர் ஆகலின் இச்சிறு துன்பத்தைப் பெரிதென நினைத்து உடனே இத்துயரைப் போக்க வேண்டும் என்று இறைவனிடம் முறையிடலாயினர்.

1.“உள்நிலாவிய ஐவரால் குமை
தீற்றி, என்னை உன் பாதபங்கயம்
நண்ணிலா வகையே நலிவான்,
இன்னம் எண்ணுகின்றாய்”

(நாலா: 2744)

2. “என்னை ஆளும் வன்கோ ஒர் ஐந்து இவை
பெய்து இராப்பகல் மோது வித்திட்டு
உன்னை நான் அணுகாவகை
செய்து போதி கண்டாய்"

(நாலா: 2745)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/93&oldid=1293729" இலிருந்து மீள்விக்கப்பட்டது