பக்கம்:அருளாளர்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்மாழ்வார் * 85



3. “வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை
மோதுவித்து, உன் திருவடிச்
சாதியாவகை நீ தடுத்து, என் பெறுதி? அந்தோ"

(நாலா: 2746)

4. “தீர்மருந்து இன்றி, ஐந்துநோடும்
செக்கில் இட்டுத் திரிக்கும் ஐவரை" -

(நாலா: 2748)

5. “ஒன்று சொல்லி, ஒருத்தினில் நிற்கிலாத

ஓர் ஐவர் வன்கயவரை என்று யான் வெல்கிற்பன் உன்திருவருள்
இல்லயேல்”

(நாலா: 2750)

6. “விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும்
செரும் ஐம்புலன் இவை
மண்ணுள் என்னைப் பெற்றால்,
என்செய்யா மற்று நீயும் விட்டால்?”

(நாலா: 2749)

7. “வன்பரங்கள் எடுத்து ஐவர் திசை திசை
வலித்து ஏற்றுகின்றனர்’

(நாலா: 2753)

இங்குக் காட்டப்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஏழாம் பத்தின் முதற்பத்துப் பாடல்களாகும். முதல் மூன்று எடுத்துக் காட்டுகளும் பொறிகளின் அல்லலால் இறைவன் திருவடியை நினைப்பதற்கு ஏற்படும் இடையூறு பேசப் படுகிறது. நான்காவது ஏழாவது எடுத்துக் காட்டுக்களில் அப்பொறிகள் தரும் துன்பத்தின் அளவு இயல்பும் பேசப் படுகின்றன. மறுபடியும் ஐந்தாவது எடுத்துக் காட்டில் அவன் திருவருள் இல்லையேல் இப்பொறிகளை வெல்ல முடியாது என்பதை அறிவிக்கின்றார். ஆறாவது எடுத்துக் காட்டில் தேவர்களையும் துன்புறுத்தும் வன்மைபெற்றவை என்பதை மீட்டுங்கூறி மற்றோர் கருத்தையும் பேசுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/94&oldid=1293768" இலிருந்து மீள்விக்கப்பட்டது