இதேபோன்று ஞானசம்பந்தரும் திருவலிவலப் பதிகத் தில் பொறி, புலன்களின் தொல்லைபற்றிப் பேசுவார்.
தாயுநியே தந்தைநியே சங்கரனே அடியேன் ஆயுநின் பால்அன்பு செய்வான் ஆதரிக்கின்றது
உள்ளம்
ஆயமாய் காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார் மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவல மேயவனே
(திருமுறை:1,50,7)
சடகோபருடைய ஏழாம்பத்துப் பாடல்கள் மானிட சமுதாயத்திற்கு ஒரு படிப்பினையைக் கற்றுத் தருவதாகும். முதலாவது பொறிகளின் துயரத்திற்கு ஏன் இப்பெரியார்கள் அஞ்சுகின்றார்கள் என்பதை அறிவுறுத்துகிறது. மனிதன் தன் விருப்பம்போல் எதனையும் செய்ய முடியாமல் தடுப்பவை யாவை? இந்தப் பொறிகள் தாமே? ஆனால் ஆழ்வார் என்ன சொல்லி வருந்துகிறார்? உன் பாதபங்கயம் நண்ணிலா வதையே நலிகின்றன’ என்றும் ‘உன்னை நான் அணுகாவகை செய்கின்றன' என்றும் உன் அடிப்போது நான் அணுகாவகை செய்கின்றன என்றும் வருத்துகிறார். பொறிகளின் சேட்டையால் இறைவன் திருவடியைச் சிந்திக்க முடியவில்லையே என்பதுதான் அவருடைய வருத்தத்திற்குக் காரணம்.
நம்முடைய விருப்பம்போல் வாழ முடியாமல் இப் பொறிகள் தடைசெய்கின்றனவே என்று வருந்துகிறோம் நாம். அவை நல்ல முறையில் பணிபுரியும்போது இறைவனை நினைக்கவும் எண்ணுவதில்லை நாம். ஆனால் இப்பெரியோர்கள் இறைவனை நோக்கி ‘உன் அடிப்போது அணுகாவதை செய்கின்றன என்று வருந்து கிறார்கள். இப்பெரியோர்களும் பொறிகளின் சேட்டையை நினைந்து வருந்துகிறார்கள். நாமும் வருந்துகிறோம்.