________________
102 துணைப் பாடம் மூலிகைச் சேர்க்கையால் சிறப்புற்றதாகும்," என்று இவ்வருவியைச் 'சிறப்பித்துத் தாம் வரைந்துள்ள' திருநெல்வே லி மாவட்ட வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார். L அருவி விழுகின்ற இ த்தைச் சார்ந்துள்ள குற்றாலம் என்னும் ஊர் உடல் நலத்திற்கு ஏற்றது. அருவியில் நீராடல் உடலுக்கு நலம்பயக்கும் என்னும் இரண்டையும் முதன் முதலில் உணர்ந்தவர் கிழக்கிந் தியக் கம்பெனியாரே ஆவர். அக்கம்பெனியாரைத் தொடர்ந்து ஆங்கில அதிகாரிகள் பலர் அங்கு இல்லங்களை அமைத்துக்கொண்டு வாழலாயினர். பின்பு அவ்வதிகாரிகளைப் பின்பற்றி நம் பாண்டிய நாட்டுக் குறுநில மன்னர் பலர் வளமனைகளைக் கட்டினர்; ஆண்டுதோறும் சாரற்காலத்தில் மட்டும் அங்கு இருந்து இன்பம் துய்க்கும் வழக்கத்தை மேற் கொண்டனர். பின்னர் ஓய்வு பெற்ற அரசாங்க உயர் அலுவலர் சிலரும் குற்றாலத்தில் குடியேறினர். நீராட வசதி குற்றால அருவியின் இணையற்ற சிறப்பினை அறிந்து ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் குற்றாலத்திற்கு வருகின்றனர்; அருவியில் நீராடு கின்றனர். இங்ஙனம் நீராட வருபவர் தாகை மிகுதிப்படவே, குற்றாலத்தில் அருவிச் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அஃது அரசாங்க அநுமதி பெற்ற சங்கம். அச்சங்கம் அமைவதற்கு முன் அருவிக்கட்டம் வழுக்குப்படிந்து இருந்தது; அங்கு நீராடுவோர்க்கு ஏற்ற பாதுகாப்பில்லாமல் இருந்தது. அருவிச் சங்கம் ஏற்பட்டபின்பு பெருமக்கள் பலரது