________________
குற்றால அருவி 103 L பொருளுதவியால் அருவியின் அடியில் ஒரு மேடை அமைக்கப்பட்டது; நீராடுவோர் பாதுகாப்புக் கென்று இருப்புக் கம்பிகள் போடப்பட்டுள்ளன; இவ் வசதிகளின் பயனாக, இப்பொழுது ஒரே நேரத்தில் ஏறத்தாழ நூறுபேர் மன அமைதியுடன் நீராட இட மிருக்கின்றது. பெண்கள் தனியாக நீராடவும் வசதி செய்யப்பட்டுள்ளது. நீராட வருவோர் ஆடை முத லியவற்றை வைத்துக்கொள்ளவும், நீராடிய பின்பு அவற்றை அணிந்து கொள்ளவும் அருவியின் அருகில் பல அறைகள் கட்டப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கியிருக்க ஒரு கல்மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. அருவியின் அடியில் மக்கள் நீந்தி விளையாடு வதற்கேற்ற ஒரு சிறு குளம் அமைந்துள்ளது. அருவி நீர் இதில் நிரம்பிச் சிற்றாறாக அடுத்துள்ள பாறைகளில் மோதியும் தவழ்ந்தும் பாய்கின்றது. இங்ஙனம் ஆறு பாயும் வழியில் மண்டபங்களும் படித்துறைகளும் அமைந்து, ஆற்றை அழகு செய்கின்றன. அருவி யின் அருகில் கோவிலுக்குச் சொந்தமான மண்டபமும் சில அறைகளும், அவற்றுக்கெதிரே தீர்த்தவாரி மண்டபமும் அமைந்துள்ளன. இங்ஙனம் குற்றா லத்தை அழகுபடுத்திச் செல்லும் சிற்றாறு மேற்குத் தொடர்ச்சி மலையோரமாகவே மிகக் குறுகிய இடத்தில் பாய்ந்து செல்கின்றது. ஆற்றுநீர் பளிங்கு போல் தெளிந்து காணப்படுகிறது. ஆற்றின் அடிப்பகுதி பாறைக்கற்களும் கூழாங்கற்களும் நிறைந்தது.