________________
குற்றால அருவி 105 திருநாவுக்கரசர் மடமும் வருவோர் தங்க வசதியானது. சொக்கன்பட்டி சமீன்தார் கட்டிய சத்திரமும், அதற்கு எதிரே உள்ள வலங்கைப் புலி விலாச மண்டபமும், இவற்றுக்கப்பால் உள்ள பதினாறு அறைகள்கொண்ட கட்டடமும், ஆற்றை நோக்கியுள்ள பிரயாணிகள் விடுதியும் வாடகைக்கு விடப்படுகின்றன. இவை தவிரச் சேனையர் மடமும் வேறுபல மடங்களும் இருக் கின்றன. சில வளமனைகளும் தனிச்சிறு கட்டடங் களும் வாடகைக்குக் கிடைக்கும். பிற வசதிகள் குற்றாலப் பதியில் பொதுமக்கள் நலனுக்காக ஒலிபரப்பியும் பல நூல்கள் கொண்ட படிப்பகமும் இருக்கின்றன. தெருக்களில் மின்விளக்குகள் அமைக் கப்பட்டுள்ளன. சிறிய அஞ்சல் நிலையம் இருக் கின்றது. கோவில் சார்பில் ஒரு படிப்பகமும் நடை பெறுகின்றது. தலச் சிறப்பு அருவிக்கு முன்பாகக் கோவில் கொண்டுள்ள குற்றால நாதர் முதலில் திருமால் வடிவத்திலிருந்தவர். "வைணவர்கள் அவருக்குப் பூசை இயற்றி வந்தார் கள். தென்னாடு போந்த அகத்தியர் இத் திருமாலின் மீது தம் கையை வைத்துச் சிவபெருமானாக்கி வழி பட்டனர்," என்று இத்தல புராணம் கூறுகின்றது. வரலாற்று முறையில் நின்று பார்ப்பின், இது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரால் பாடப்பட்டுள்ளது. சம்பந்தர் இங்குள்ள இயற்கை வனப்பில் ஈடுபட்டு உவகைப் பெருக்குடன் திருப்பதி கம் பாடியுள்ளார். அதே ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த