உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

106 துணைப் பாடம் திருநாவுக்கரசர் தம் பாக்களில் வைப்புத்தலமாக இத னைப் போற்றியுள்ளார். கி.பி.9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரரும் அவர் நண்பரான சேரமான் பெரு மாளும் குற்றால நாதரை வழிபட்டனர் என்று பெரிய புராணம் பேசுகின்றது. அதே நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் “குற்றா லத் தெங் கூத்தா போற்றி" என்று விளித்துப் பாடியுள் ளார். கந்தபுராணத்தைச் சேர்ந்த சங்கர சங்கிதையி லும் சனற்குமார சங்கிதையிலும் இவ்விடத்தின் சிறப் புக் கூறப்பட்டுள்ளது. பிறவா யாக்கைப் பெரியோ னாகிய சிவபிரான் உமாதேவியாரைத் திருமணம் செய்யும் பொருட்டு இவ்விடத்துச் சிறப்பினை அகத் தியர்க்கு எடுத்துக் கூறினான் என்று தலபுராணம் கூறுகின்றது. இத்தலத்திலுள்ள மரம் குறும்பலா என்பது. திரு ஞானசம்பந்தர் இதன்மீது ஒரு தனித் திருப்பதிகம் பாடியுள்ளார். சைவ நாயன்மார் எவரும் வேறு எத் தலத்திலுள்ள தல விருட்சத்துக்கும் இவ்வாறு தனிப் பதிகம் பாடியதில்லை. சிவபிரான் திருமாலாயிருந்த காலத்தில் அவருக்கு ஈசான திக்கில் இக்கால ஐந் தருவிச் சாலையும் இலஞ்சிச் சாலையும் சந்திக்கின்ற இடத்தில் உள்ளது கூத்தர் கோயில். இக்கூத்தரைத் தான் மாணிக்கவாசகர் முதலியோர் பாடினர். சிவ பெருமான் வீற்றிருக்கும் குறும்பலாவின் அடி ஒரு தலமாகப் பண்டையோரால் பாடப்பட்டது. பெருங் கோவிலில் உறைகின்ற இறைவன் பெயர் திருக் குற்றாலநாதர் என்பது. அவர் திரிகூட மலை அடிவாரத்தில் இருப்பதால் திரிகூடநாதர் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/110&oldid=1693070" இலிருந்து மீள்விக்கப்பட்டது