உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

108 துணைப் பாடம் வசந்த வீதி பாதை 'வசந்த வீதி* கோவிலைச் சுற்றியுள்ள எனப் பெயர் பெறும். இவ்வீதியில் சிறு கோவில்களும் மண்டபங்களும் இருக்கின்றன. சுற்றுக் கோவில்கள் திரிகூடமலைமீது செண்பக அருவிக்கு அருகில் செண்பகக் காட்டில் ஓர் அம்மன்கோவில் இருக்கிறது. இவ்வம்மன் பெயர் செண்பகதேவி என்பது. இவ்வம் மன் சிலை வசீகரத் தோற்றம் உடையது. குற்றால நாதர்க்கு விழாக்கள் தொடங்குமுன், அவ்விழாக்கள் நன்கு நடைபெற, இவ்வம்மனுக்கு முதற்பூசை நடை பெறும். இவ்வம்மனுக்குச் சித்திரைத் திங்கள் முழு மதியன்று சிறப்பு வழிபாடு நடை பெறும். சித்திர சபை திரிகூடநாதரைச் சுற்றியுள்ள கோவில்களில் சித்திர சபை குறிப்பிடத்தக்கது. இஃது ஐந்தருவிச் சாலையில் அமைந்துள்ளது. இஃது இறைவன் நடன மாடும் ஐந்து சபைகளில் ஒன்றாகும். திருவாலங் காட்டிலுள்ள இரத்தின அம்பலம், தில்லையிலுள்ள பொன்னம்பலம், திரு ஆல வாயிலுள்ள வெள்ளி யம்பலம், திருநெல்வேலியிலுள்ள தாமிர அம்பலம் என்னும் நான்குடன் குற்றாலத்திலுள்ள இவ்வோவிய அம்பலமும் சேர்ந்து ஐந்தாகும். மேலே கூறப் பெற்ற நான்கு அம்பலங்களிலும் விக்கிரகமாகக் காட்சி யளிக்கும் கூத்தப் பெருமான், இங்கு ஓவிய உருவில் காட்சி அளிக்கின்றார். எழுவகைத் தாண்டவங்களில் ஒன்றாகிய திரிபுர தாண்டவம் இங்கே நடைபெறுவ தாக ஐதிகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/112&oldid=1693072" இலிருந்து மீள்விக்கப்பட்டது