உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குற்றால அருவி 109 இச்சித்திர சபைக்கு எதிரில் பெரிய தெப்பக் குளமும், அதன் நடுவில் உயர்ந்த கோபுரமுள்ள நீராழி மண்டபமும் அழகுடன் காட்சி அளிக்கின்றன. இவ்வோவிய அம்பலச் சுவர்களில் கருத்தையும் டுள்ளன. ஈர்க்கத்தக்க கோயில் கல்வெட்டுக்கள் இதுகாறும் கண்ணையும் ஓவியங்கள் தீட்டப்பட் கல்வெட்டு ஆராய்ச்சித் துறை யாளர் குற்றாலத்தில் எண்பத்து ஒன்பது கல்வெட்டுக் களைப் படியெடுத்துள்ளனர். அவற்றுள் பதினான்கு கல்வெட்டுக்கள் சோழ வேந்தர் காலத்தவை; எழுபத் தைந்து கல்வெட்டுக்கள் பாண்டிய அரசர் காலத்தவை. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசனாக இருந்த முதற் பராந்தகன், பின்வந்த முதல் இராசராசன் ஆகியோர் கல்வெட்டுக்கள் சிறப்பானவை. இவற்றால் கி.பி. 10ஆம் நூற்றாண்டி லேயே குற்றாலநாதர் கோவில் சிறப்புற்றிருந்தது என்பதை நன்கு அறியலாம். கி.பி. 13ஆம் நூற் றாண்டின் முற்பகுதியில் பாண்டியப் பேரரசனாக இருந்த மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் குற்றாலநாதர் கோவிலைக் கவனிக்க ஐந்நூற்றுப் பன்னிருவர் கொண்ட ஆலோசனை சபை ஒன்று இருந்தது. சடையன் மாறன் என்ற பாண்டியன் காலத்தில் 'பாசுபதப் பெருமக்கள்' என்ற பெயர் கொண்ட ஆலோசனை சபை இருந்ததாகக் கல்வெட் டுக் கூறுகின்றது. பின்வந்த மாறவர்மன் விக்கிரம யாண்டியன், சடையவர்மன் வீரபாண்டியன், சடைய வர்மன் சுந்தரபாண்டியன், சடையவர்மன் பராக்கிரம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/113&oldid=1693073" இலிருந்து மீள்விக்கப்பட்டது