________________
குற்றால அருவி 115 அமைந்திருப்பது குற்றாலச் சிலேடை வெண்பா வாகும். குற்றால யமக அந்தாதி என்பது பல புராணக் கருத்துக்களைத் திரட்டிக் குற்றாலப் பெருமானைப் புகழ்வது. குற்றால மாலை எளிய நடையில் அமைந் துள்ள பாடல்களைக் கொண்டது; பக்திப் பரவசத்தை வல்லது. குற்றால ஊடல் இருபது பாடல்களைக் கொண்ட சிறுநூல்; நகைச்சுவைமிக்கது. இறைவியும் இறைவனும் ஒருவரை யொருவர் குறை கூறி எள்ளி நகையாடி விளையாடுவதாக இந்நூல் செய்யப்பட்டுள்ளது. உண்டாக்க குற்றாலக் குறவஞ்சி தமிழ் இலக்கிய வரிசையில், சிறுபிரபந்த வகை களுள் ஒன்றாக வைத்து எண்ணப்படும் குறவஞ்சி என்பது, மலைநாட்டு மகளான குறத்தி பற்றிய பாட் டாகும். இந்நூலுள் கூறப்படும் இருவேறு காதல் நிகழ்ச்சிகளிலும் குறத்தியே சிறப்பான இடம் பெறு கிறாள் ஆதலின், இந்நூல் குறவஞ்சி (குற்த்திப்பாட்டு) எனப் பெயர் பெற்றது. நூலின் இரு பகுதிகள் நூலின் முற்பகுதியில் பாட்டுடைத் தலைவன் தன்னை ஒப்பனை செய்துகொண்டு புடை சூழ்வோ ருட ன் ஊர்தி ஒன்றில் ஏறி உலாவருதலும், மகளிர் பலரும் அவனைக் கண்டு மயங்குதலும், குறிப்பிட்ட ஒரு தலைவி அவன் அழகில் ஈடுபட்டு அவனை விரும்பு தலும், மலைநாட்டுக் குறத்தி மாத்திரைக் கோலும் மணிக்கூடையும் தாங்கிவந்து மங்கையின் மனக் கருத்தை வெளிப்படுத்தி அவள் எண்ணம் கைகூடும்