________________
116 துணைப் பாடம் எனக் குறி கூறுதலும், குறிகேட்டு மகிழ்ந்த தலைவி குறத்திக்குப் பரிசில் வழங்கலும் காணப்பெறும். பிற் பகுதியில், குறத்தியின் கணவனாகிய குறவன் அவ ளைத் தேடி வருதலும், பல இடங்களில் அவளைக் காணாது வருந்துதலும், இறுதியில் கண்டு மகிழ்தலும் சிறப்பாகக்காணப்பெறும். பாட்டுடைத் தலைவன்பால் கொள்ளும் காதல், குறவன் குறத்தியின் காதல் என்னும் இரண்டிலும் குறவஞ்சி சிறப்பிடம் பெறுகின்றாள். இந்நூலின் இடையிடையே நாடகத் தமிழ் விரவியிருப்பதால், இது 'குறவஞ்சி நாடகம்' என்றும் பெயர் பெறும். தலைவி நூற் பொருள் குற்றாலக் குறவஞ்சி என்னும் நூலில் திரிகூட நாதர் இட டப வாகனத்தில் ஏறி உலா வருதலும், வசந்தவல்லி என்னும் இளமங்கை அவர்மீது காதல் கொள்ளுதலும், சிங்கி என்னும் குறத்தி வந்து அவ ளது கையைப் பார்த்துக் குறி சொல்லுவதும், சிங்கி யின் கணவனான சிங்கன் என்பவன் அவளைத் தேடித் திரிந்து வருந்துவதும், அவளைக் குற்றாலத் தலத்தின் தெரு ஒன்றில் கண்டு மகிழ்வதும் இந்நூலில் செய் யுள் நயம் செறியப் பாடப்பெற்றுள்ளன. இறைவன் உலா வருதல் திரிகூடநாதர் உலா எழுவதற்கு முன்பு அவரது வாசற் கட்டியக்காரன் அவ்வுலாவை நகர மக்களுக்கு அறிவிக்கின்றான். தேவர்களும், திருவுடை மன்னர் களும், முனிவர்களும், முனிவிலாது தொண்டு செய் யும் அடியார்களும் தம் இரு பக்கங்களிலும் சூழ்ந்து