உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குற்றால அருவி 117 வரத் திரிகூடநாதர் குற்றாலத் தெருக்களில் உலாவி வர எழுந்தருளுகிறார். யானை முகத்துப் பிள்ளையும், மயில் வாகனத்துப் பிள்ளையும் வெற்றிப்படை தாங் கிச் சேனை முகத்தில் வருகிறார்கள். பலவகை வாத்தி யங்களின் முழக்கம் திக்குகளை அதிரச் செய்கின்றது. தொண்டர்கள் இசைக்கும் திருமுறையும் திருப்பல் லாண்டும் அமுதமழை பொழிகின்றன. உலாக்காணும் மங்கையர் மனநிலை திரிகூடநாதர் இங்ஙனம் உலா வருதலைக்கண்ட தையலார் பலர் அவரை விழிகளால் பருகுகின்றனர். அவரது ஒப்பற்ற அழகில் ஈடுபடுகின்றனர். ஒரு கைக்கு மட்டும் வளையலை அணிந்த பெண்கள், குற் றாலநாதர் உலா எழுந்த செய்தியைக் கேட்டதும், தமது மற்றொரு கையில் வளையலை அணிதலை மறந்து தெருவிற்கு ஓடி வருகின்றனர். அந்நிலையில் அவர் களைப் பார்த்துப் பிற பெண்கள் நகைக்கின்றனர். வேறு சில மங்கையர் உலாச்செய்தி அறிந்தவுடனே தம் ஒரு கண்ணுக்கு மை தீட்டி மற்றொரு கண்ணுக் குத் தீட்ட எடுத்த மையைக் கையிலேந்தி உலாவைக் காண ஓடி வருகின்றனர். இங்ஙனம் வந்து நிற்கும் பெண்கள் இறைவன் பேரழகில் உள்ளத்தைப் பறி கொடுத்து மயங்குகின்றனர். வசந்தவல்லி வசந்தவல்லி என்பவள் ஓர் இள நங்கை; பேரழகு படைத்தவள். அவள் தெருவில் தோழியரோடு பந்தடித்து விளையாடிக்கொண்டிருக்கிறாள். அம் மங்கை இறைவனது ஒப்பற்ற அழகில் ஈடுபடுகின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/121&oldid=1693080" இலிருந்து மீள்விக்கப்பட்டது